தொடர் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது
- மதுபான கடைகளை உடைத்து தொடர் கொள்ளையில் ஈடுபட்டுவந்த கும்பல்.
- சுமார் ரூ.4 லட்சம் மதிப்புள்ள நகைகள் பறிமுதல்.
கும்பகோணம்:
தஞ்சாவூர், திருவா ரூர் பெரம்பலூர் மாவட்ட ங்களில் தொடர்ந்து வழிப்பறி செய்தும், பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு திருடியும் அரசு மதுபான கடைகளை உடைத்து தொடர் கொள்ளையில் ஈடுபட்டுவந்த கும்பலில் இருவர் கைது செய்யப்பட்டனர்.
தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த குற்றவாளிகளை பிடிக்க தஞ்சாவூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிப்பிரியா உத்தரவின் பேரில் திருவிடைமருதூர் துணை கண்காணிப்பாளர் ஜெகபர்சித்திக் மேற்பார்வையில் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் காமராஜ் தலைமையில் கவியரசன் போலீசார் ரமணி, விக்னேஷ் தினேஷ் இவர்களை கொண்ட தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய திருவாடுதுறை குமார், தஞ்சாவூர் மாதவனை ஆகியோர் ஆடுதுறை பஸ் நிறுத்ததில் இருப்பதாக போலீசார் தகவல் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரையும் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடமிருந்து சுமார் ரூ.4 லட்சம் மதிப்புள்ள நகைகள் மீட்கப்பட்டன. மேலும் அவர்கள் பயன் படுத்திய மோட்டர் சைக்கிள் பிறமுதல் செய்யப்பட்டது.