விபச்சார வழக்கில் பெண் உள்பட இருவர் கைது
- ஒரு வாடகை வீட்டில் ஆன்லைன் மூலமாக விபச்சாரம் நடைபெற்று வருவதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட இரண்டு பெண்களையும் மீட்க பட்டனர்.
பட்டீஸ்வரம்:
கும்பகோணம் பகுதியில் ஆன்லைன் வழியாக விபச்சாரம் நடைபெற்று வருவதாக தஞ்சாவூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத்க்கு வந்த தகவலின் அடிப்படையில் தஞ்சை மாவட்ட பகுதிகளில் ஆன்லைன் விபச்சாரத்தில் ஈடுபடுபவர்களை கண்டு பிடித்து கைது செய்ய உத்தர விட்டார்.
இதன் அடிப்படையில் கும்பகோணம் போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ்குமார் மேற்பா ர்வையில் தனிப்படை சப்- இன்ஸ்பெக்டர் கீர்த்திவாசன் தலைமையில்,சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெ க்டர்கள் ராஜா, செல்வகுமார், தலைமை காவலர்கள் பாலசுப்பிரமணியம், நாடிமுத்து, பார்த்திபநாதன், செந்தில்குமார், ஜனார்த்தனன், பெண் காவலர் சுபேகா ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் கும்பகோணம் பாணாதுறை தெற்கு வீதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் ஆன்லைன் மூலமாக விபச்சாரம் நடைபெற்று வருவதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது, அதனை தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் ஆன்லைன் மூலமாக விபச்சாரத்தில் ஈடுபட்ட தஞ்சாவூர் கீழவாசலை சேர்ந்த ஜான் சர்ச்சில் (எ)ராஜா (வயது 43) , பட்டிஸ்வரம் அடுத்துள்ள உடையாளூரை சேர்ந்த ரேவதி (எ) ரம்யா (35) ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் அவர்களால் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட இரண்டு பெண்களையும் மீட்க பட்டனர்.
இது குறித்து கும்பகோணம் கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகேசன் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் பாதிக்கப்பட்ட பெண்கள் இருவரும் தஞ்சை பெண்கள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.