உடன்குடி- குலசை சாலையை புதுப்பிக்க வேண்டும் - பயணிகள் கோரிக்கை
- உடன்குடியில் இருந்து குலசேகரன்பட்டினம் செல்லும் சாலை போக்குவரத்து அதிகம் நிறைந்த சாலையாகும்.
- வாகனங்கள் ஒரே திசையில் மட்டும் வந்து செல்வதால் விபத்து அதிகமாக ஏற்படுகிறது.
உடன்குடி:
உடன்குடியில் இருந்து குலசேகரன்பட்டினம் செல்லும் சாலை போக்குவரத்து அதிகம் நிறைந்த சாலையாகும். இந்த சாலையில் பல இடங்களில் அதிக பள்ளம் இருப்பதினால் வாகன ஓட்டிகள் பகலிலும், இரவு நேரங்களிலும் அதிவேகத்தில் எதிர்புற சாலையில் செல்வதினால் ஒரு மாதத்திற்கு சுமார் 20 வாகன விபத்துகள் ஏற்படுகிறது.
தினசரி பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாண விகள், முதியவர்கள், குடும்பத்தார்கள், தொழிலாளர்கள், அதிகாரிகள் போன்ற ஏராளமானோர் செல்லும் முக்கியமான சாலையில் ஏராளமான இடங்கள் குண்டும், குழியுமாக உள்ளது. வாகனங்கள் ஒரே திசையில் மட்டும் வந்து செல்வதால் விபத்து அதிகமாக ஏற்படுகிறது. விபத்தினை தடுப்பதற்கு நெடுஞ்சாலைத் துறையினர் பொது மக்களின் நலனை கவனத்தில் கொண்டு விரைவில் இந்த தார்சாலையை புதுப்பித்து தரவேண்டும் என்று பயணிகள் மற்றும் பல்வேறு தரப்பினர் தனித்தனியாக மாவட்ட கலெக்டர் மற்றும் நெடுஞ்சாலைத் துறையினருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர்.