உள்ளூர் செய்திகள்

உடன்குடி- சிவலூர் சாலை சீரமைக்கப்பட்ட காட்சி.

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஏற்பாட்டில் உடன்குடி-சிவலூர் சாலை சீரமைப்பு

Published On 2023-06-16 08:48 GMT   |   Update On 2023-06-16 08:48 GMT
  • சிவலூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலைகள் குண்டும், குழியுமாக இருந்தன.
  • மழைநீர் தேங்காதபடி சாலையை உயர்த்தி அமைக்க மனுவில் கூறி இருந்தனர்.

உடன்குடி:

உடன்குடி மெயின் பஜார் நான்குவழி சந்திப்பில் இருந்து தாண்டவன்காடு செல்லும் மெயின் ரோட்டில் பண்டாரஞ்செட்டிவிளை பெண்கள் மேல்நிலைப்பள்ளி சிவலூர் ஆகிய பகுதிகளில் உள்ள சாலைகள் மிகவும் பள்ளமாகவும், குண்டும், குழியுமாக பல ஆண்டுகள் இருந்தன.

அமைச்சரிடம் மனு

மேலும் போக்குவரத்துக்கு மிகவும் இடையூறாக இருந்தது. இருசக்கர வாகனம் ஓட்டிகள் உட்பட அனைத்து பயணிகளும் இவ்வழியாக செல்லும் போது கடும் அவதிப்பட்டனர்.

எனவே இந்த சாலைகளை புதுப்பித்து, உயர்த்தி அமைக்க வேண்டும் என்று இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புதுறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணனிடம் தி.மு.க.வினர் கோரிக்கை மனு கொடுத்து வற்புறுத்தி வந்தனர்.

நடவடிக்கை

அதில் பழுதடைந்துள்ள இந்த சாலைகளை புதுப்பித்து மழைநீர் தேங்காதபடி உயர்த்தி அமைக்க வற்புறுத்தி இருந்தனர். இதைத்தொடர்ந்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஏற்பாட்டில் நெடுஞ்சாலைத்துறையினர் மழைநீர் தேங்காத அளவுக்கு சாலையை உயர்த்தி இருவழி சாலைகளாக அமைத்தனர்.

பல ஆண்டுகளாக பழுதடைந்து காணப்பட்ட சாலையை சீரமைத்ததால் பயணிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News