உள்ளூர் செய்திகள்

உடன்குடி வட்டன்விளை முத்தாரம்மன் கோவில் கொடை விழா

Published On 2023-11-03 08:41 GMT   |   Update On 2023-11-03 08:41 GMT
  • வட்டன் விளை முத்தாரம்மன் கோவில் ஐப்பசி மாத பெருங்கொடை விழா கடந்த 29-ந் தேதி வருஷாபிஷேகத்துடன் தொடங்கியது.
  • 108 பால்குடம் பவனி கோவில் முன்பு இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியே சென்று மீண்டும் கோவிலை வந்து அடைந்தது.

உடன்குடி:

உடன்குடி அருகேயுள்ள வட்டன் விளை முத்தாரம்மன் கோவில் ஐப்பசி மாத பெருங்கொடை விழா கடந்த 29-ந் தேதி வருஷாபிஷேகத்துடன் தொடங்கியது.

தொடர்ந்து விழா நாட்களில் பக்தி இன்னிசை, புஷ்பாஞ்சலி, சிறப்பு அன்னதானம், பக்தி இன்னிசை, திருவிளக்கு பூஜை, அலங்கார தீபாராதனை, உச்சினிமாகாளி அம்மன் சிங்க வாகனத்தில் பவனி, 108 பால்குடம் பவனி கோவில் முன்பு இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியே சென்று மீண்டும் கோவிலை வந்து அடைந்தது. தொடர்ந்து அம்மன், மற்றும் பல்வேறுசுவாமிகளுக்கு அபிஷேக ஆராதனைகள், அலங்கார தீபாராதனை, அம்மன் வீதியுலா, சுமங்கலி பூஜை, இரவு 12 மணிக்கு கிளி வாகனத்தில் ஸ்ரீ சந்தனமாரியம்மன், பவானி அம்மன் மஞ்சள் நீராடி வீதியுலா, கரகாட்டம், மா விளக்கு பூஜை, முத்தாரம்மன் பூஞ்சப்பரத்தில் வீதி உலா நடந்தது.

நேற்று கொடைவிழா நிறைவுபூஜை, இரவு 8 மணிக்கு நெல்லை கண்ணன் குளுவினரின் ஆடல், பாடல் கலை நிகழ்ச்சி என 5 நாள் கொடை விழா நடந்தது. ஏற்பாடுகளை ஊர்மக்கள், விழாக்குழுவினர் செய்து ள்ளனர்.

Tags:    

Similar News