உள்ளூர் செய்திகள்

வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வேளாண் உபகரணங்கள்

Published On 2023-01-24 09:02 GMT   |   Update On 2023-01-24 09:02 GMT
  • கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம் 2022-23-ன் தார்பாய்கள், மின்கல தெளிப்பான்கள் (பேட்டரி ஸ்பிரேயர்), வேளாண் உபகரணங்களின் தொகுப்பு (மண்வெட்டி, களை கொத்து, கதிர் அரிவாள்-2, கடப்பாரை, காறைசட்டி), ஜிப்சம், ஜிங் சல்பேட் உள்ளிட்டவை மானிய விலையில் வழங்கப்பட உள்ளது.
  • உழவர் நலத்துறை உதவி வேளாண்மை அலுவலர் ராதாமணி தெரிவித்துள்ளார்.

பரமத்தி வேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம் 2022-23-ன் கீழ் கபிலர்மலை ஒன்றியம் வடகரையாத்தூர் கிராமத்திற்கு தார்பாய்கள், மின்கல தெளிப்பான்கள் (பேட்டரி ஸ்பிரேயர்), வேளாண் உபகரணங்களின் தொகுப்பு (மண்வெட்டி, களை கொத்து, கதிர் அரிவாள்-2, கடப்பாரை, காறைசட்டி), ஜிப்சம், ஜிங் சல்பேட் உள்ளிட்டவை மானிய விலையில் வழங்கப்பட உள்ளது.

எனவே விவசாயிகள் தங்களின் ஆதார் அட்டை நகல், கணினி சிட்டா, ரேசன் அட்டை நகலை கபிலர்மலை உதவி வேளாண்மை அலுவல கத்திற்கு கொண்டுவந்து பெற்றுக் கொள்ளலாம்.

வேளாண்மை உபகர ணங்களின் தொகுப்பு பெறுவதற்கு சிறு, குறு விவ சாயிகளுக்கான சான்றிதழ் கண்டிப்பாக கொண்டுவர வேண்டும் என கபிலர்மலை உழவர் நலத்துறை உதவி

வேளாண்மை அலுவலர் ராதாமணி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News