உள்ளூர் செய்திகள் (District)

தருமபுரியில் இன்று காலை முதல் சாரல் மழை பெய்து வருவதால்,பூக்கள் விற்பனையாகாமல் அப்படியே வைக்கப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

தொடர் சாரல் மழையால், தருமபுரி பூ மார்க்கெட்டில் விற்பனையாகாத பூக்கள்

Published On 2023-11-14 10:06 GMT   |   Update On 2023-11-14 10:06 GMT
  • வியாபாரிகள் கவலை
  • சாமந்தி ரூ. 50-க்கு விற்பனையானது.

 தருமபுரி,

தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, மாரண்ட அள்ளி, பெலமா ரனஅள்ளி, திருமல்வாடி, கரகூர், ஐந்து மைல்கள், பாப்பாரப்பட்டி, பென்னா கரம், இண்டூர், அதக்கப்பாடி, பாலவாடி, நல்லம்பள்ளி, தொப்பூர், சாமி செட்டிபட்டி, கெட்டூர், மொரப்பூர், பாப்பி ரெட்டிப் பட்டி, கம்பைநல்லூர், பிக்கிலி மலை, உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசா யிகள் பல ஆயிரம் ஏக்கரில் பூக்கள் சாகுபடி செய்து வருகின்றனர்.

இங்கு விளையும் சாமந்தி, செண்டுமல்லி, கனகாம்பரம், சம்பங்கி, பன்னீர் ரோஸ், சன்னமல்லி, குண்டுமல்லி, கோழி கொண்டை, அரளி, கனகாம்பரம் உள்ளிட்ட மலர்களை விவசாயிகள் தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வரும் பூ மார்க்கெட்டிற்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.

இந்த நிலையில் இன்று சம்பங்கி கிலோ ரூ.20, சாமந்தி ரூ. 50, பன்னீர் ரோஸ் ரூ. 100, அரளி ரூ. 100, சன்னமல்லி கிலோ ரூ. 400, குண்டு மல்லி கிலோ ரூ. 400, கனகாம்பரம் ரூ. 600, என்ற நிலையில் இன்று பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை விற்பனை செய்யப் பட்டு வருகிறது.

இன்று விடியற்காலை முதல் வங்காள விரிகு டாவில் உருவாகியுள்ள புயலின் காரணமாக தொ டர் சாரல் மலையால் நல்ல விலை இருந்தும் பூக்களை வாங்க வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வரா ததால் பூக்கள் தேக்க நிலை யில் இருந்து வருவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News