உள்ளூர் செய்திகள்

மத்திய இணை அமைச்சர் எல். முருகனிடம் மனு அளிக்கப்பட்டது.

பெரும்பிடுகு முத்தரையருக்கு தபால் தலை வெளியிட வலியுறுத்தல்

Published On 2022-07-24 06:54 GMT   |   Update On 2022-07-24 06:54 GMT
  • தமிழுக்கு மெய்க்கீர்த்தி கண்ட பேரரசர் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் சுவரன்மாறன் கி.பி 705-745 முதல் தஞ்சாவூரை தலைநகரமாக கொண்டு ஆட்சி நடத்தினார்.
  • அறம் மாறா நல்லாட்சி நடத்திய பேரரசர் சுவரன்மாறனின் பிறந்தநாளான மே 23 -ந் தேதி அரசு சார்பில் கொண்டாடப்படுகிறது.

பூதலூர்:

திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள நேமம் கிராமத்தில் பெரும்பிடு குமுத்தரையர் காளாபிடாரி அம்மன் கோவிலில் அமைந்துள்ள அரையர் சுவரன்மாறன் பிடாரி அறக்கட்டளை சார்பில் அதன் பொறுப்பாளர் ஜோதி தலைமையில் பேராசி ரியர் சந்திரசேகரன் மற்றும் குழுவினர் மத்திய இணை அமைச்சர் எல்.முருகனை சந்தித்து மனு ஒன்றை கொடுத்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

தமிழுக்கு மெய்க்கீர்த்தி கண்ட பேரரசர் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் சுவரன்மாறன் கி.பி 705-745 முதல் தஞ்சாவூரை தலைநகரமாக கொண்டு ஆட்சி நடத்தினார். தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகில் நேமம் ஊராட்சியில் அன்னை மாகாளத்து காளா பிடாரி அம்மன் கோவில் அமைத்து வணங்கினார். அறம் மாறா நல்லாட்சி நடத்திய பேரரசர் சுவரன்மாறனின் பிறந்தநாளான மே 23 -ந் தேதி அரசு சார்பில் கொண்டாடப்படுகிறது.

தமிழக அரசும், மத்திய அரசும் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சுவரன்மாறனுக்கு விரைவில் தபால்தலை வெளியிட வேண்டும். மேலும் சிவனுக்கு 1008 லிங்கங்களை அமைத்து சைவத்துக்கு பெரும் தொண்டாற்றிய ஆன்மீக சித்தன் பேரரசர் சுவரன்மாறன் பெயரில் தஞ்சாவூர் தமிழ் பல்கலை க்கழகத்தில் ஆய்வு இருக்கை ஒன்று அமைத்திட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதே போன்ற கோரிக்கை அடங்கிய மனுவை டெல்லியில் தி.மு.க. எம்.பி கனிமொழியிடமும் கொடுத்தனர்.

Tags:    

Similar News