சாத்தான்குளம் அருகே பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. நிதி உதவி
- ஜெனித், ஜோசுவா ஆகிய 2 சிறுவர்கள் பள்ளி படிப்பை தொடர முடியாமல் தவித்தனர்.
- இதனையறிந்த ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. அவர்களது பள்ளி மேற்படிப்பிற்க்கான செலவை ஏற்று 8 வருடமாக கல்வி கட்டணத்தை தனது சொந்த நிதியிலிருந்து செலுத்தி வருகிறார்.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் ஒன்றியம் தச்சன்விளை கிராமத்தை சேர்ந்த தாய், தந்தையை இழந்த பாட்டி பால்தங்கம் பராமரிப்பில் உள்ள ஜெனித், ஜோசுவா ஆகிய இரு சிறுவர்கள் பள்ளி படிப்பை தொடர முடியாமல் தவித்தனர். இதனையறிந்த ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. அவர்களது பள்ளி மேற்படிப்பிற்க்கான செல வை ஏற்று கடந்த 2014-முதல் 8 வருடமாக கல்வி கட்டணத்தை தனது சொந்த நிதியிலிருந்து செலுத்தி வருகிறார்.
அதில் ஜெனித் பள்ளி படிப்பை முடித்து சென்னை-கிங்ஸ் என்ஜினீ யரிங் கல்லூரியில் இலவச மாக என்ஜினீயரிங் கல்வி பயின்று வருகிறார். இரண்டாவது பேரன் ஜோசுவா திசையன்விளை-லயன்ஸ் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் பயின்று வருகிறார். இந்த நிலையில் மாணவன் ஜோசுவாவின் கல்வி கட்டணத்திற்க்காக ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. வழங்கிய கல்வி கட்டண வரைவோலையை தச்சன்விளையில் பாட்டி பால்தங்கம், மாணவன் ஜோசுவாவிடம் தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் துணைத் தலைவர் சங்கர் வழங்கினார்.
அப்போது சாத்தா ன்குளம் வட்டார காங்கி ரஸ் கமிட்டி தலை வர்கள் சக்திவேல் முருகன், பார்த்த சாரதி, முத்து வேல், பிரபு கிருபா கரன், தச்சன்விளை கிராம காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் சிவா, முதலூர் யோகபாண்டி, சாத்தான்குளம் நகர மகிளா காங்கிரஸ் தலைவர் ராணி மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் சாலமோன்,முத்துராஜ், உதயமணி, மணிகண்டன், அழகேசன், மகாலிங்கம், சித்திரை பழம், ராஜன் ஆகியோர் உடன் இருந்தனர். கல்வி உதவி தொகையை பெற்ற பாட்டிமற்றும் மாணவன் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ.வுக்கு நன்றி தெரிவித்தனர்.