உள்ளூர் செய்திகள்

நெல்லை சந்திப்பு கைலாசநாதர் கோவிலில் தேரோட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.

நெல்லை சந்திப்பு கைலாசநாதர் சுவாமி கோவிலில் வைகாசி திருவிழா தேரோட்டம்

Published On 2023-05-28 09:10 GMT   |   Update On 2023-05-28 09:10 GMT
  • இந்த ஆண்டுக்கான வைகாசி திருவிழா கடந்த 20-ந்தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது.
  • அதிகாலை முதலே சிறப்பு பூஜைகள் மற்றும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.

நெல்லை:

நெல்லை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான சந்திப்பு கைலாசபுரம் தாமிரபரணி ஆற்றங்கரை யில் சவுந்திரவல்லி அம்பாள் சமேத கைலாசநாதர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் நடைபெறும் பல்வேறு திருவிழாக்களில் வைகாசி திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது.

தேரோட்டம்

இந்த ஆண்டுக்கான வைகாசி திருவிழா கடந்த 20-ந்தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் காலை, மாலை இரு வேளைகளிலும் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பல்வேறு வாகனங்களில் வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்றது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது.

இதற்காக அதிகாலை முதலே சிறப்பு பூஜைகள் மற்றும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் கைலாசநாத சுவாமி தேருக்கு எழுந்தருளினார். அதனைத்தொடர்ந்து நடத்தப்பட்ட சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் காலை 9 மணிக்கு தேர் வடம் பக்தர்களால் பிடித்து இழுக்கப்பட்டது.

நான்கு ரத வீதிகளிலும் சுற்றிவந்து நிலையம் வந்தடைந்த தேருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய பழங்கள் சூரை விடும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News