உள்ளூர் செய்திகள்
வலம்புரி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
- கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 4 கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.
- கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
மெலட்டூர்:
தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, அகரமாங்குடி கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ வலம்புரி விநாயகர் கோவிலில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நான்கு காலயாக சாலை பூஜைகளை தொடர்ந்து, ஸ்ரீ வலம்புரி விநாயகர் கோவில் கோபுர கலசத்திற்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
குடமுழுக்கு விழா நிகழ்ச்சியில் அகரமாங்குடி அதனை சுற்றியுள்ள கிராமங்களை ஏராளமான கிராமமக்கள் பங்கேற்றனர்.
கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை திருப்பணிகுழுவினர், கிராம முக்கியஸ்தர்கள், கிராமவாசிகள் செய்து இருந்தனர்.