வாழப்பாடியில் வள்ளலார் 200-வது பெருநிலைப் பெருவிழா
- வாழப்பாடி அடுத்த சிங்கிபுரத்தில் நித்திய சத்திய தர்மச்சாலை சார்பில், திரு வருட்பிரகாச வள்ளலார் ராமலிங்க அடிகளாரின் 200-வது பெருநிலைப் பெருவிழா நடந்தது.
- இவ்விழாவில், பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம், மூலிகை தேநீர் வழங்கப்பட்டது.
வாழப்பாடி:
வாழப்பாடி அடுத்த சிங்கிபுரத்தில் நித்திய சத்திய தர்மச்சாலை சார்பில், திரு வருட்பிரகாச வள்ளலார் ராமலிங்க அடிகளாரின் 200-வது பெருநிலைப் பெருவிழா, வாழப்பாடி வாசவி மஹால் மண்டபத்தில் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
சாது செல்வராஜ் தலை மையில் அகவல் பாராயணத்துடன் தொடங்கிய இவ்விழாவில், திருவிளக்கு பூஜை, மகா மந்திர வேள்வி மற்றும் ஆயில்பட்டி சன்மார்க்க சான்றோர்கள் கந்தசாமி, சண்முகம் மற்றும் வைத்தியகவுண்டன்புதுார் அங்கமுத்து ஆகியோரது திருவருட்பா இசைத்தல் நிகழ்வும் நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து, திருவண்ணாமலை சாது ஜானகிராமனின், சன்மார்க்க நெறி வாழ்வு முறை, உடல், உள்ளம் பேணி காக்கும் முறைகள் குறித்த சொற்பொழிவும், இறையருள் பெறும் நெறி முறை குறித்து சென்னை கொளப்பாக்கம் சாது சந்தானம் அறவுரை நிகழ்வும் நடைபெற்றது. இவ்விழாவில், பங்கேற்ற அனைவருக்கும் அன்னதா னம், மூலிகை தேநீர் வழங்கப்பட்டது. நிறைவாக, சாது கலாவதி நன்றி கூறினார்.