வள்ளலார் 200-வது பிறந்த நாள் விழா சொற்பொழிவு
- சேலம் அம்மாப்பேட்டை செங்குந்தர் திருமண மண்டபத்தில் அருட்பிரகாச வள்ளலார் 200-வது பிறந்தநாள் விழாவை ஒட்டி சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது.
- இதில் அகவல் பாராயணம் ஓதப்பட்டது.
சேலம்:
சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் சார்பில் சேலம் அம்மாப்பேட்டை செங்குந்தர் திருமண மண்டபத்தில் அருட்பிரகாச வள்ளலார் 200-வது பிறந்தநாள் விழாவை ஒட்டி சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது. இதில் ஜோதிகண்ணன் மற்றும் குழுவினரால் அகவல் பாராயணம் ஓதப்பட்டது. சன்மார்க்க கொடியை கோல்டன் பி.தங்கவேல் ஏற்றி வைத்தார்.
சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு சேலம் சிட்டிபாபு தலைமை தாங்கினார். கலை, மதியழகன் ஆகியோர் வரவேற்றனர். தாரை குமரவேலு, ஹரிகிருஷ்ணன் ராமலிங்கம், ஓம்சக்தி கணபதி, குணசேகரன், சீனிவாசன், சவுந்திரராஜன், மகா பாண்டியன், மாரிமுத்து ஆகியோர் வள்ளலார் கொள்கைகள் குறித்து பேசினர். சிறப்பு அழைப்பாளர்களாக சேலம் மாவட்ட சன்மார்க்க தலைவர் அங்கப்பன், ராஜகோபால் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
சேலம் ஸ்ரீ ராமானுஜர் மணிமண்டபம் தலைவர் ஸ்ரீராமன் அன்னதானத்தை தொடங்கி வைத்தார். லோகநாதன் நன்றி கூறினார். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளானோர் கலந்து கொண்டனர்.