உள்ளூர் செய்திகள்

கோவில்பட்டி அருகே பூமாதேவி ஆலயத்தில் வருசாபிஷேக விழா

Published On 2023-09-16 08:54 GMT   |   Update On 2023-09-16 08:54 GMT
  • வருசாபிஷேகத்தை முன்னிட்டு காலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு திருப்பள்ளியெழுச்சி பூஜை நடைபெற்றது.
  • 11 வகையான வாசனைத் திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்து அலங்காரம் செய்யப்பட்டு சோடனை தீபாராதனை நடைபெற்றது.

கோவில்பட்டி:

கோவில்பட்டி அருகே மந்திதோப்பில் அமைந்துள்ள அம்மா பூமாதேவி ஆலயம் சித்தர் பீடத்தில் 30-ம் ஆண்டு வருசாபிஷேக விழா நடைபெற்றது.

அதை தொடர்ந்து காலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு திருப்பள்ளியெழுச்சி பூஜை நடைபெற்றது. காலை 6 மணிக்கு கணபதி பூஜை, சங்கல்பம், கும்ப பூஜை, கணபதி ஹோமம், அம்பாள் மூலமந்திர ஹோமம், பூர்ணாகுதி, அம்பாளுக்கு சிறப்பு 11 வகையான மஞ்சள், மா, பொடி, திரவியம், பால், தேன், சந்தனம், குங்குமம் போன்ற வாசனைத் திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்து அலங்காரம் செய்யப்பட்டு சோடனை தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளை லட்சுமணன் சுவாமி தலைமையில் ஆலய அர்ச்சகர் செல்வசுப்பிரமணியன், முரளிதரன் சாமி, ஆறுமுகம் ஆகியோர் செய்தனத். இதில் கடம்பூர் ராஜு எம்.எல்.ஏ., சுப்பாராஜ், சங்கரேஸ்வரி, பழனிச்சாமி, ராமர், பால்ராஜ் மந்திரமூர்த்தி ,திருவிளக்கு பூஜை குழுவினர் மீனாட்சி, இசக்கிமுத்து, மாரித்தாய், லட்சுமி, பானு மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். நிறைவாக பிரசாதம் வழங்கப்பட்டது. இவ்விழா ஏற்பாடுகளை ஸ்ரீ குரு பாத தரிசன பரிபாலன அறக்கட்டளை சார்பில் செய்யப்பட்டது.

Tags:    

Similar News