உள்ளூர் செய்திகள்
வாழப்பாடி அண்ணா நகரில் காசநோய் கண்டறியும் முகாம்
- வாழப்பாடி பேரூராட்சி அண்ணா நகரில் காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது.
- நம்பிக்கை மைய ஆலோசகர் சசிகலா ஆகியோர் கொண்ட குழுவினர், 50- க்கும் மேற்பட்டோருக்கு எக்ஸ்ரே பரிசோதனை செய்தனர்.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி பேரூராட்சி அண்ணா நகரில் காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ள நடமாடும் எக்ஸ்ரே பரிசோதனை வாகனத்துடன் நடைபெற்ற இம்முகாமை பேளூர் வட்டார மருத்துவ அலுவலர் பொன்னம்பலம் தொடங்கி வைத்தார்.
சேலம் நடமாடும் எக்ஸ்ரே ஆய்வக நுட்புநர் ரவிச்சந்திரன், காசநோய் சிகிச்சை மேற்பார்வையாளர்கள் ராஜ்குமார், கவிதா, நம்பிக்கை மைய ஆலோசகர் சசிகலா ஆகியோர் கொண்ட குழுவினர், 50- க்கும் மேற்பட்டோருக்கு எக்ஸ்ரே பரிசோதனை செய்தனர்.
காசநோயின் அறிகுறிகள், பரவும் விதம், தடுப்பு முறைகள், சிகிச்சை முறைகள், காசநோயாளிகளுக்கான அரசின் நலத்திட்டங்கள் குறித்து விளக்கமளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது வாழப்பாடி அன்னை அரிமா சங்க தலைவர் ஷபிராபானு மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.