வேதாரண்யம் மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிக்க செல்ல கூடாது
- போலீஸ் மற்றும் மீனவர்கள், பொதுமக்கள் கலந்தாய்வு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
- மீன் பிடி தொழிலுக்கு கடலுக்கு போகும்போது தகுந்த பாதுகாப்பு கருவிகளை எடுத்து செல்லவேண்டும்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை மீனவ கிராம பகுதியில் கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் மற்றும் மீனவர்கள், பொதுமக்கள் கலந்தாய்வு விழிப்புணர்வு ஆலோசணைக் கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு வேதாரண்யம் கடலோர காவல் குழுமஇன்ஸ்பெக்டர், ஜோதிமுத்துராமலிங்கம் தலைமை வகித்தார்கோடியக்கரை.
மீனவகிராம பஞ்சாயத்தார்கள் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் வேதாரண்யம் கடலோர காவல் குழுமம் இன்ஸ்பெக்டர் ஜோதிமுத்து ராமலிங்கம் மீனவர்களிடம் பேசியதாவது
கடற்கரை மற்றும் கடல் பரப்பில் நடக்கும் எந்த குற்ற சம்பவங்களுக்கும் மீனவர்கள் துணைபோகாமல் குற்றங்கள் மற்றும் கடத்தல், அந்நியர்கள் வருகைகள் குறித்து உரிய நேரத்தில் போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும், மீன் பிடி தொழிலுக்கு கடலுக்கு போகும்போது தகுந்த பாதுகாப்பு உடைகள், கருவிகளை எடுத்து செல்லவேண்டும்.
14 வயதுக்கு உட்பட்ட குழந்தை தெஎழிலாளர்களை அழைத்து செல்லக்கூடாது எல்லை தாண்டி மீன்பிடிக்க கூடாதுஎன்பது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து பேசினர்.