உள்ளூர் செய்திகள்

வேளாங்கண்ணி பேராலயத்தின் நிறைவு விழாவை முன்னிட்டு கொடி இறக்கப்பட்டது.

வேளாங்கண்ணி பேராலயத்தின் ஆண்டு பெருவிழா நிறைவு

Published On 2023-09-09 09:53 GMT   |   Update On 2023-09-09 09:53 GMT
  • பேராலய ஆண்டு பெருவிழா கடந்த 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
  • பேராலய கீழ்கோவிலில் பிறந்தநாள் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

நாகப்பட்டினம்:

வேளாங்கண்ணியில் கீழ்த்திசை நாடுகளின் லூர்து நகரம் என போற்றப்படும் புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் உள்ளது.

இந்த பேராலயத்தின் ஆண்டு பெருவிழா கடந்த 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது.

முக்கிய பெருவிழாவான பெரிய சப்பர பவனி நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து நேற்று புனித ஆரோக்கிய மாதாவின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பேராலய கீழ் கோவிலில் பிறந்தநாள் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

அதனை தொடர்ந்து பேராலய பங்குத்தந்தை அற்புதராஜ் கொடிமரத்தை புனிதம் செய்து கொடி இறக்கப்பட்டு ஆலயத்திற்கு உள்ளே எடுத்துச் செல்லப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பேராலய நிர்வாகம் சார்பில் காவல்துறை, தீயணைப்புத் துறை, போக்குவரத்து துறை உள்ளிட்ட அனைத்து துறைக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

இதில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News