உள்ளூர் செய்திகள் (District)

அங்காடி கடைகள் கட்டுவதற்கு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அடிக்கல் நாட்டினார்

வெள்ளகோவில் வாரச்சந்தை இடமாற்றம்

Published On 2022-06-13 08:03 GMT   |   Update On 2022-06-13 08:03 GMT
  • வீரக்குமார் கோவில் திடலில் தற்காலிக வாரச்சந்தை நடைபெறும்.
  • வணிக அங்காடி கடைகள் கட்டுவதற்கு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அடிக்கல் நாட்டினார்.

வெள்ளகோவில்,

வெள்ளகோவிலில் ஞாயிறுதோறும் நடைபெறும் வாரச்சந்தை வழக்கம் போல் நேற்று வாரச்சந்தை வளாகத்தில் நடைபெற்றது. இந்தநிலையில் தினசரி வணிக அங்காடி கட்டட பணி துவங்கப்பட உள்ளதால், வரும் 19ந்தேதி முதல் கோவை ரோட்டில் உள்ள வீரக்குமார் கோவில் திடலில் தற்காலிக வாரச்சந்தை நடைபெறும் என வெள்ளகோவில் நகராட்சி கமிஷனர் மோகன் குமார் அறிவித்துள்ளார்.

வாரச்சந்தை வளாகத்தில் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 3 கோடியே 81 லட்சம் செலவில் 130 வணிக அங்காடி கடைகள் கட்டுவதற்கு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அடிக்கல் நாட்டினார். மேலும் 85 கடைகள் கூடுதலாக கட்டுவதற்கு தமிழக அரசுக்கு நகராட்சி சார்பில் பரிந்துரைக்கப்படும் என்றார் அமைச்சர்.

Tags:    

Similar News