உள்ளூர் செய்திகள்

தொடர் விடுமுறை காரணமாக ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் ரூ.18.90 கோடிக்கு மது விற்பனை

Published On 2023-10-26 08:26 GMT   |   Update On 2023-10-26 08:26 GMT
  • 115 டாஸ்மாக் கடைகள் உள்ளன
  • அதிகாரிகள் தகவல்

வேலூர்:

தமிழகத்தில் டாஸ்மாக் மதுக் கடைகளில் புத்தாண்டு, பொங்கல், தீபாவளி உள்ளிட்ட விசேஷ நாள்களில் மது விற்பனை வழக்கத்தைவிட அதிகளவில் இருக்கும். இந்த நிலையில், ஆயுதபூஜை, விஜயதசமியையொட்டி, அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள், தொழில் நிறுவனங்களுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் 3 நாள்களுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

இந்த தொடர் விடுமுறை காரணமாக ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் அதிக அளவு மது விற்பனை நடைபெற்றது.

இது குறித்து டாஸ்மாக் அதிகாரிகள் கூறியதாவது:-

வேலூர் டாஸ்மாக் மாவட்டத்துக்கு உட்பட்ட வேலூர்,திருப்பத்தூர் மாவட்டங்களில் மொத்தம் 115 டாஸ்மாக் மதுக் கடைகள் உள்ளன.

இவற்றில் கடந்த 3 நாள்களில் மட்டும் ரூ.11.56 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. இதேபோல், ராணிப்பேட்டை மாவட்டத்தில் மொத்தம் 83 கடைகள் உள்ளன. இவற்றில் ரூ.7.34 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.

அந்த வகையில், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 3 மாவட்டங்களில் ரூ.18.90 கோடிக்கு டாஸ்மாக் மது விற்பனை நடைபெற்றுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News