உள்ளூர் செய்திகள்

அமைச்சர் துரைமுருகன்

அமைச்சர் பங்கேற்ற அரசு விழாவில் திடீர் பவர் கட்... மின் ஊழியர்கள் 2 பேர் பணியிட மாற்றம்

Published On 2022-09-13 10:03 GMT   |   Update On 2022-09-13 13:11 GMT
  • அரசு விழாவில் மின்சாரம் தடைபட்டதால் நடவடிக்கை
  • 10 நிமிடங்கள் கடந்தும் மின்சாரம் வரவில்லை

வேலூர்:

காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா நேற்று நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கினார்.

தொடர்ந்து காட்பாடி அரசு பெண்கள் பள்ளியில் சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. இதிலும் அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு சைக்கிள் வழங்கி பேசினார்.

அப்போது 70 ஆண்டுகளுக்கு முன்பு தான் பள்ளி மற்றும் கல்லூரியில் பயின்ற நினைவு குறித்தும் தனக்கு பாடம் கற்றுத்தந்த ஆசிரியர் குறித்து மாணவர்களிடம் மிகுந்த ஆர்வத்துடன் பகிர்ந்து கொண்டிருந்தார்.

அந்த நேரத்தில் திடீரென மின்சாரம் தடை செய்யப்பட்டது. இதனால் அமைச்சர் துரைமுருகன் இருக்கையில் சென்று அமர்ந்து விட்டார். உடனே கலெக்டர் குமாரவேல் பாண்டியன் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் நந்தகுமார், கார்த்திகேயன், துணை மேயர் சுனில் குமார் ஆகியோர் மின்வாரிய அதிகாரிகளை பதட்டத்துடன் தொடர்பு கொண்டனர்.

10 நிமிடங்கள் கடந்தும் மின் இணைப்பு வரவில்லை. இதனால் அமைச்சர் துரைமுருகன் மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கிவிட்டு புறப்பட்டு சென்றார்.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் காட்பாடி, தாராப்படவேடு ஆகிய பகுதி துணை மின் நிலைய உதவி பொறியாளர்கள் கிரண்குமார், சிட்டிபாபு ஆகிய 2 பேரை காட்பாடி வடுகன்தாங்கல் துணை மின் நிலையத்துக்கு பணியிட மாற்றம் செய்து வேலூர் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் ராமலிங்கம் உத்தரவிட்டார்.

இந்த சம்பவம் மின்வாரிய ஊழியர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News