உள்ளூர் செய்திகள்

ஒடுகத்தூர் பேரூராட்சியில் ரூ.25.30 கோடியில் குடிநீர் திட்ட பணிகள்

Published On 2023-07-01 09:29 GMT   |   Update On 2023-07-01 09:29 GMT
  • பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம்
  • 15 வார்டுகளிலும் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் விநியோகம்

அணைக்கட்டு:

வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் பேரூராட்சியில் ஒவ்வொரு மாதமும் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகள் கட்டமைப்புகள் மேற்கொள்வது தொடர்பாக கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, ஒடுகத்தூர் பேரூராட்சியில் மாதாந்திர கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் சத்யாவதி பாஸ்கரன் தலைமை தாங்கினார், செயல் அலுவலர் ராமு முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பேரூராட்சி பணியாளர் மதன் தீர்மானங்களை வாசித்தார்.

இதில் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் ஒடுகத்தூர் பேரூராட்சியில் ரூ.25.30 கோடி மதிப்பில் குடிநீர் திட்ட பணிகள் மேற்கொள்ளப்படும் 15 வார்டுகளிலும் புதிய குடிநீர் பைப்லைன் மூலம் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இக்கூட்டத்தில் பேரூராட்சி பணியாளர்கள் உட்பட அனைத்து வார்டு கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News