உள்ளூர் செய்திகள்

உடல் தகுதித் தேர்வில் ஓட்டப்போட்டியில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.

2-வது நாளாக போலீஸ் பணிக்கான உடற்தகுதி தேர்வு

Published On 2023-02-07 09:36 GMT   |   Update On 2023-02-07 09:36 GMT
  • வேலூர் நேதாஜி மைதானத்தில் நடந்தது
  • போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்

வேலூர்:

வேலூர் சரகத்திற்கு உட்பட்ட வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் 2-ம் நிலை காவலர்களுக்கான உடற்பகுதி தேர்வு நேற்று தொடங்கியது.

நேற்று முதல் நாளில் உடற்பகுதி தேர்வில் கலந்து கொள்ள 400 பேருக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டு இருந்தது. 359 பேர் உடல் தகுதித் தேர்வில் கலந்து கொண்டனர். 41 பேர் கலந்து கொள்ளவில்லை. உடல் தகுதி தேர்வில் நேற்று ஒரே நாளில் 294 பேர் தேர்வு பெற்றனர்.

இந்த நிலையில் இன்று காலை இரண்டாம் நிலை காவலர்களுக்கான உடல் தகுதி தேர்வு வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி மேற்பார்வையில், போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் 2-வது நாளாக நடந்தது.

இதில் 4 மாவட்டங்களை சேர்ந்த 400 பேர் கலந்து கொண்டு நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், ஓட்டப்பந்தயம், அசல் சான்றிதழ் சரிபார்த்தல் உள்ளிட்டவை நடந்தது. இதையொட்டி நேதாஜி மைதானத்தில் 120-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

நாளை 3-வது நாளாக உடல் தகுதி தேர்வில் 259 பேர் கலந்து கொண்ட அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. முதல் கட்ட உடல் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு 2-வது கட்டமாக வருகிற 9-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை 2-வது கட்ட உடல் தகுதி தேர்வு நடைபெற உள்ளது.

Tags:    

Similar News