உள்ளூர் செய்திகள்

வேலூர் நேதாஜி மைதானத்தில் போலீசார் பறிமுதல் செய்த வாகனங்கள் ஏலம் விடப்பட்ட காட்சி.

360 வாகனங்கள் ரூ.14 லட்சத்துக்கு ஏலம்

Published On 2023-08-08 09:44 GMT   |   Update On 2023-08-08 09:44 GMT
  • வேலூர் நேதாஜி மைதானத்தில் நடந்தது
  • போலீஸ் சூப்பிரண்டு தகவல்

வேலூர்:

வேலூர் மாவட்டத்தில் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்த 363 வாகனங்கள் இன்று நேதாஜி மைதானத்தில் ஏலம் விடப்பட்டது.

கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் எடி. எஸ்.பி. மனோகரன் ஆகியோர் தலைமையில் ஏலம் நடந்தது. ஏலத்தில் பங்கேற்க ஏராளமானவர்கள் திரண்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதையடுத்து போலீசார் ஏலத்தில் பங்கேற்க வந்தவர்களை ஒழுங்கு படுத்தினர்.

வாகன ஏலத்தில் கலந்து கொள்ள ரூ.50 நுழைவு கட்டணம் செலுத்தியவர்கள் மட்டுமே ஏலத்தில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.

இந்த ஏலத்தில் மொத்தம் 359 பைக், ஒரு ஆட்டோ ஏலம் விடப்பட்டது.

இதன் மொத்த மதிப்பு ரூ.14 லட்சத்து 45,160 என போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் தெரிவித்தார்.

Tags:    

Similar News