உள்ளூர் செய்திகள்

பாம்பு கடித்து 1½ வயது குழந்தை பலி

Published On 2023-05-27 08:29 GMT   |   Update On 2023-05-27 08:29 GMT
  • விஷம் உடல் முழுவதும் பரவியதால் இறந்தது
  • சாலை வசதி கேட்டு மலைவாழ் மக்கள் கோரிக்கை

அணைக்கட்டு:

அணைக்கட்டு அருகே உள்ள அல்லேரி அத்திமரத்து கொல்லை கிராமத்தில் வசித்து வரும் கூலி தொழிலாளி விஜி.

இவரது மனைவி பிரியா இவர்களின் மகள் தனுஷ்கா (வயது 1½) குழந்தை நேற்று இரவு வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்தார்.

இரவு நேரம் என்பதால் அருகே இருந்த காட்டுப்பகுதியில் இருந்து பாம்பு ஒன்று ஊர்ந்து குடியிருப்பு பகுதிக்குள் வந்துள்ளது.

இதனைப் பார்க்காத குழந்தை அருகே சென்ற உடன் பாம்பு குழந்தையை கடித்தது.

குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு ஓடிவந்த பெற்றோர் அவரை பாம்பு கடித்ததை பார்த்துள்ளனர்.

உடனடியாக அணைக்கட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். சாலை வசதி இல்லாத காரணத்தால் மருத்துவமனைக்கு செல்ல நீண்ட நேரம் ஆகியுள்ளது. அப்போது விஷம் உடல் முழுவதும் பரவி குழந்தை செல்லும் வழியிலேயே இறந்தது.

எனவே சாலை வசதி இல்லாத காரணத்தால் குழந்தையின் உயிரை காப்பாற்ற முடியாமல் குழந்தை இறந்து விட்டதாக பெற்றோர் கூறினர்.

மேலும் தகவலறிந்த அணைக்கட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கைக்குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அடுக்கம்பாறை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் உடனடியாக அல்லேரி, அத்திமரத்து கொல்லை மலை கிராமங்களுக்கு சாலை வசதி செய்து தரவேண்டும் என அப்பகுதி மலைவாழ் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News