மகனை மிரட்டி 15 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம்
- எஸ்.பி. ஆபீசில் புகார்
- நடவடிக்கை எடுக்க தாய் வலியுறுத்தல்
அணைக்கட்டு:
அணைக்கட்டு பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அளித்த மனுவில் கூயிருப்பதாவது:-
ஆசனாம்பட்டு கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணை என் மகன் காதலித்து வந்துள்ளார்.
அப்போது காதலுக்காக 15 வயது சிறுமி எனது மகனின் காதலுக்கு தூது சென்றார்.
இந்த நிலையில் 15 வயது சிறுமியின் தாயார் அந்த வாலிபர் சென்று எனது மகளை திருமணம் செய்துகொள் வாழ்க்கை சிறப்பாக அமையும், அதற்கு நான் வழிவகை செய்து தருகின்றேன் என 15 வயது சிறுமியின் தாயார் எனது மகனிடம் ஆசைவார்த்தை கூறியுள்ளார்.
திருமணம் செய்துகொள் என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதன்பின் வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் எனது சிறுமியை எனது மகன் என்பவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கினார் என புகார் மனு கொடுத்தார்.
விசாரணையின் போது போலீஸ் நிலையம் வெளியே வந்து எனது மகனை மிரட்டி கட்டாய தாலிகட்டுமாறு கூறியுள்ளனர். அதனை மறுத்து அவர் உன் மகளுக்கு 15 வயது தான் ஆகின்றது.
நான் எப்படி திருமணம் செய்து கொள்ள முடியும் என கூறியுள்ளார். அதற்கு சிறுமியின் தாயார் தற்போது சும்மா கட்டு 18 வயது ஆனதும் என் மகளை உங்க வீட்டுக்கு அழைத்து போ என கூறி அவரை மிரட்டி அங்கே கையில் தயார் நிலையில் வைத்து இருந்த மஞ்சல் கயிற்றை கட்ட வைத்துள்ளனர். இதனையடுத்து புகாரை திரும்ப பெற்றுக்கொண்டு சென்றுள்ளனர்.
எனது மகனை கொன்று விடுவதாக மிரட்டுகின்றனர்.
இருப்பினும் எனது மகன் ஏதேனும் தவறு செய்து இருந்தால் விசாரித்து உரிய பரிசோதனை செய்து நடவடிக்கைகள் எடுக்கலாம், எனக்கும் என் குடும்பத்தாருக்கும் எவ்வித தடங்களும் இல்லை எனது மகனை காப்பாற்றி முழுமையாக என்னிடம் ஒப்படைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.