தண்ணீர் தேடி கிராமத்திற்குள் புகுந்த மான்
- பொதுமக்கள் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்
- வனப்பகுதியில் உள்ள தொட்டிகளில் தண்ணீர் நிரப்ப வலியுறுத்தல்
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம்சுற்றியுள்ள வனப்பகுதிகளில் ஏராளமான புள்ளி மான்கள் உள்ளன. நேற்று காலை தண்ணீர் தேடி சுமார் 2 வயது உள்ள பெண் புள்ளிமான் கவுண்டன்ய மகாநதி ஆற்றின் வழியாகவே வந்துள்ளது .
அப்போது நாய்கள் துரத்தியதால் பயந்துபோன மான் குடியாத்தம் போடிப்பேட்டை நீரேற்று நிலையம் அருகே வந்தது.
இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள் அந்த மானை பத்திரமாக மீட்டு குடியாத்தம் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
குடியாத்தம் வனச்சரக அலுவலர் வினோபா உத்தரவின் பேரில் வனத்துறையினர் விரைந்துசென்று அந்த மானை மீட்டு கல்லப்பாடி காப்புக்காடுகள் பகுதியில் விட்டனர். தற்போது கோடைகாலம் துவங்கி விட்டதால் வனப்பகுதிகளில் உள்ள தண்ணீர் தொட்டிகளில் தண்ணீர் இல்லை என கூறப்படுகிறது.
இதனால் வனவி லங்குகள் தண்ணீர் தேடி ஊருக்குள் புகுந்து விடுகிறது கடந்த சில தினங்களுக்கு முன்பும் தண்ணீர் தேடி புள்ளி மான் ஒன்று குடியாத்தம் நகருக்குள் நுழைந்தது.
வனத்துறையினர் உடனடியாக தனி கவனம் செலுத்தி வனப்பகுதிகளில் உள்ள தொட்டிகளில் தண்ணீர் நிரப்ப வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.