கலெக்டர் அலுவலகத்தில் மரக்கிளை முறிந்து விழுந்தது
- யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை
- தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது
வேலூர்:
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. கடலோர மாவட்டங்களில் தென் மற்றும் மத்திய மாவட்டங்களில் ஒரு சில வட மாநிலங்களில் மழை பெய்து வருகிறது.
வேலூர் மாவட்டத்தில் நேற்று சில பகுதிகளில் விட்டுவிட்டு சாரல் மழை பெய்தது. இரவு முதல் இன்று காலை வரை தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்தது.
பல்வேறு இடங்களில் சேரும் சகதியுமாக மாறியது. வேலூரில் முள்ளிப்பாளையம், கேகே நகர், சம்பத் நகர், சைதாப்பேட்டை, சுண்ணாம்பு கார தெரு, கொசப்பேட்டை உட்பட பல்வேறு தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது.
இந்த நிலையில் வேலூர் கலெக்டர் அலுவலகத்தின் உள்ள பழமையான மரம் உள்ளது. இந்த மரம் ஒரு பகுதி பட்டுப்போன நிலையில் இருந்தது.
கடந்த 2 நாட்களாக பெய்த மழையின் காரணமாக மரத்தின் பெரிய கிளைகள் நேற்று இரவு முறிந்து விழுந்தது. இரவு நேரம் என்பதால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.