குப்பைகளை அகற்றாத ஊராட்சி செயலாளர் மீது நடவடிக்கை
- கலெக்டர் அதிரடி உத்தரவு
- நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம் அணைக்கட்டில் தாலுகா அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம், எம்.எல்.ஏ. அலுவலகம், அரசு மேல்நிலைப் பள்ளிகள், கால்நடை மருத்துவமனை, சிறிய வணிக வளாகங்கள், துணி கடைகள், உள்ளிட்டவைகள் உள்ளன.
சுற்று வட்டார மக்கள் மட்டுமின்றி, மலைவாழ் மக்களும் தங்களது அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள அணைக்கட்டுக்கு தான் அதிகம் வருகின்றனர். சிறிய வர்த்தக நகரமாக திகழும் இந்த அணை க்கட்டில் மக்கள் அதிகம் கூடுவதால் எப்போதும் பரபரப்பாக காணப்படும்.
அணைக்கட்டு பஜாரில் சுமார் 200-க்கும் மேற்பட்ட வணிக வளாகங்கள் மற்றும் கடைகள் உள்ளன. கடைகள், வீடுகள் மற்றும் தெருக்களில் உள்ள குப்பைகளை தூய்மை பணியாளர்கள் வாகனங்கள் மூலம் சேகரிக்கின்றனர்.
தினந்தோறும் சேகரிக்கப்படும் குப்பை களை அணைக்கட்டு- வேலூர் சாலையில் உள்ள கெங்கநல்லூர் சந்தைமேடு அருகே கொட்டப்பட்டு வருகிறது. இதனால் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேட்டு ஏற்படுகிறது. மலைபோல் குவிக்கப்படும் குப்பைகள் சில சமயங்களில் பகல் நேரங்களிலேயே தீயிட்டு கொளுத்து கின்றனர்.
அந்த சமயத்தில் கரும்புகை மண்டலம் உருவாகி சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்களின் கண்களில் எரிச்சலை உருவாக்குகிறது.
இது தொடர்பான செய்தி மாலைமலரில் புகைப்படத்துடன் வெளியானது.
இதனைத் தொடர்ந்து வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் அணைக்கட்டு சாலை யோரத்தில் குப்பகைளை தீ வைத்து எரிப்பதை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது எரிந்து கொண்டிருந்த குப்பை களை தண்ணீர் ஊற்றி அணைத்து கொட்ட ப்பட்டுள்ள குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும். இனிமேல் இங்கு குப்பைகள் கொட்ட கூடாது. சுற்றுப்பு றத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். குப்பைகளை அகற்றாமல் வைத்திருந்த ஊராட்சி செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
மேலும் அணைக்கட்டு பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை அணைக்கட்டு அல்லது கெங்கநல்லூர் ஊராட்சியில் உள்ள வருவாய் துறைக்கு சொந்தமான இடத்தில் திடக்கழிவு மேலாண்மை அமைக்க இடம் வழங்க வேண்டும்.
மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து குப்பைகளை உரமாக மாற்றி உடனடியாக அப்புற ப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரி களுக்கு உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து அணைக்கட்டு தாலுகா ஆஸ்பத்திரி மற்றும் ஊசூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட இடங்களில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது அணைக்கட்டு தாசில்தார் வேண்டா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுதாகரன், சாந்தி, வின்சென்ட்ரமேஷ்பாபு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.