உள்ளூர் செய்திகள்
மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம்
- வருகிற 13-ந் தேதி நடக்கிறது
- போலீஸ் சூப்பிரண்டு தகவல்
வேலுார்:
வேலுார் மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட பைக்குகள் மற்றும் 4 சக்கர வாகனங்கள், வருகிற 13-ந் தேதி காலை 9 மணி முதல் வேலுார் நேதாஜி மைதானத்தில் ஏலம் விடப்படுகிறது.
இவற்றின் உரிமையா ளர்கள் உரிமை கோரிய வாகனங்களை தவிர்த்து, மீதமுள்ளவை பொது ஏலம் விடப்படும். ஏலம் எடுக்க பார்வையிடுவோர் ரூ.100 நுழைவுக்கட்டணம் செலுத்திய பின்னரே ஏலம் கேட்க அனுமதிக்கப்படுவர்.
ஏலத்தொகையுடன் பைக்குகளுக்கு 12 சதவீத விற்பனை வரியும், 4 சக்கர வாகனங்களுக்கு 18 சதவீத விற்பனை வரியும் சேர்த்து செலுத்தவேண்டும்.மேலும் இதற்கான ரசீது வழங்கப்படும். அதுவே அந்த வாகனத்தின் உரிமை ஆவணம் ஆகும்.
இவ்வாறு வேலூர் போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.