உள்ளூர் செய்திகள்

அணைக்கட்டு தாலுகா அலுவலகத்தில் உத்தரவு ஆணைகளை ஆர்டிஓ கவிதா வழங்கினார். உடன் தாசில்தார் ரமேஷ்.

பிறப்பு, இறப்பு மனுக்கள் பதிவு சான்றிதழ்கள் வழங்கும் முகாம்

Published On 2023-03-25 09:08 GMT   |   Update On 2023-03-25 09:08 GMT
  • அணைக்கட்டு தாலுகா அலுவலகத்தில் நடந்தது
  • மனுக்கள் விசாரணைக்கு அனுப்பட்டது

அணைக்கட்டு:

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா அலுவலகத்தில் காலதாமத பிறப்பு, இறப்பு வேண்டி மனுக்களை பதிவு செய்தவர்களுக்கு உத்தரவு ஆணைகள் வழங்கும் முகாம் நடந்தது.

இதில் வேலூர் ஆர்டிஓ கவிதா தலைமை தாங்கினார், அணைக்கட்டு தாசில்தார் ரமேஷ், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் மீராபெண்காந்தி முன்னிலை வகித்தனர். மண்டல துணை தாசில்தார்கள், வருவாய் ஆய்வாளர்கள், விஏஓக்கள் ஆகியோர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்று பொதுமக்களின் மனுக்களை பெற்று பதிவு செய்தனர்.

இதில் தாலுகா அலுவலகத்தில் இருந்து விசாரனை நடத்தி ஆர்டிஓவுக்கு மனுக்கள் அனுப்பட்ட மனுதார்களுக்கு அழைப்பு விடுத்து அனைவரும் பங்கேற்றி ருந்தனர். அவர்களிடம் ஆர்டிஓ தனித்தனியாக நேரடியாக விசாரனை மேற்கொண்டார்.

இதனையடுத்து முகாமிலே மனு அளித்த தகுதியான நபர்களிடம் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் பெற்று கொள்வதற்கான உத்தரவு ஆணைகளை ஆர்டிஓ கவிதா வழங்கினார்.

இதில் காலதாமத பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் வேண்டி விண்ணப்பித்து இருந்தவர்களில் 34 நபர்களுக்கு பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் பெற்றுக் கொள்வதற்கான உத்தரவு ஆணைகள் வழங்கப்பட்டது.

அதேபோல் புதியதாக காலதாமத பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் கேட்டு 50 பேர் மனுக்களை அளித்தனர். அந்த மனுக்கள் பதிவு செய்யபட்டு விசாரணைக்கு அனுப்பட்டது.

Tags:    

Similar News