உள்ளூர் செய்திகள்

ஓடும் ரெயிலில் வாலிபர் பிணம்

Published On 2023-10-16 09:16 GMT   |   Update On 2023-10-16 09:16 GMT
  • கண்காணிப்பு கேமரா காட்சி மூலம் தெரியவந்தது
  • பெயர், விவரம் தெரியவில்லை

வேலூர்:

கேரளா மாநிலம் ஆலப்புழாவில் இருந்து தன்பாத் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு காட்பாடி வந்தது.

அப்போது முன்பதிவு பெட்டியில் வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது.

அதன்பேரில் காட்பாடி ரெயில்வே போலீசார் சென்று பார்த்தனர். அப்போது 20 வயது வாலிபர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

அவர் திருப்பூரில் இருந்து ரெயில் ஏறியதும், ஈரோடு அருகே 2 முறை அபராத தொகை செலுத்தியதும் அதற்கான ரசீது இருந்ததும் தெரியவந்தது. இருப்பினும் அவரது பெயர், விவரம் தெரியவில்லை.

ரோஸ் நிற சட்டை, கருப்பு நிற ஜீன்ஸ் பேண்ட்டு அணிந்திருந்தார். அவரது உடலை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து காட்பாடி ரெயில்வே போலீசார் கூறியதாவது:-

இறந்த வாலிபர் பீகாரை சேர்ந்தவராக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. திருப்பூர் ரெயில் நிலையம் வழியாக வந்த தன்பாத் எக்ஸ்பிரஸ் ெரயிலில் அவர் ஏறியுள்ளார். இது கண்காணிப்பு கேமரா காட்சி மூலம் தெரியவந்துள்ளது.

ரெயிலில் ஏறும்போது சகஜமாக ஏறியுள்ளார். எனவே நெஞ்சு வலி ஏற்பட்டு இறந்தாரா? அல்லது எப்படி இறந்தார் என பிரேத பரிசோதனை முடிவு வந்த பின்னரே தெரியவரும் என்றனர்.

Tags:    

Similar News