உள்ளூர் செய்திகள்

திருட்டு வழக்கில் கைப்பற்றப்பட்ட தங்க நகைகள். கைது செய்யப்பட்ட நிரஞ்சன் மற்றும் நிதிஷ்குமாரை படத்தில் காணலாம்.

பெண்களிடம் நகை பறித்த அண்ணன், தம்பி கைது

Published On 2023-08-08 09:42 GMT   |   Update On 2023-08-08 09:42 GMT
  • கண்காணிப்பு கேமராவில் சிக்கினர்
  • 10½ பவுன் நகை, பைக் பறிமுதல்

குடியாத்தம்:

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருணாசலநகர் பகுதியில் சில தினங்களுக்கு முன்பு இரவு வீட்டுக்குச் ஸ்கூட்டரில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த அனிதா என்பவரின் கழுத்தில் இருந்த 2 ½ பவுன் தங்கச் செயினை மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை கண்டுபிடிக்க குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி தலைமையில் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெகதீசன், ஆனந்தன், ஏட்டு சந்திரபாபு, காவலர் ஜெயக்குமார் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படையினர் கடந்த சில தினங்களாக செயின் பறிப்பு சம்பவம் நடைபெற்ற பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை தொடர்ந்து கண்காணித்து அதனை பின்தொடர்ந்தனர்.

பள்ளிகொண்டா அருகே உள்ள ஒரு ஓட்டலில் பதிவான கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளில் கொள்ளையர்களின் பதிவு மிக தெளிவாக பதிவு ஆகியிருந்தது.

அவர்கள் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தியதில் பள்ளிகொண்டா அடுத்த கீழ்வெட்டுவானம் அம்பேத்கர் நகரை சேர்ந்த நெடுஞ்செழியன் மகன் நிரஞ்சன் (வயது 25) பொய்கை பகுதியில் ஹோட்டலில் புரோட்டா மாஸ்டராக உள்ளார். இவரது தம்பி நிதீஷ்குமார் (21) என தெரியவந்தது.

விசாரணையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடியாத்தம் அடுத்த சென்றாம்பள்ளி ஆர்.எஸ்.ரோடு பகுதியில் கீதாஞ்சலி என்பவரிடம் 7 சவரன் செயின், அதே பகுதியில் உள்ள தனியார் மகளிர் கல்லூரி அருகே அரசு மருத்துவமனை நர்சு சுதா என்பவரின் கழுத்தில் இருந்த 6½ பவுன் நகையையும், பேரணாம்பட்டு அடுத்த பல்லலகுப்பம் பகுதியில் சாவித்திரி என்ற மூதாட்டியிடம் 4 பவுன் நகை பறித்ததும் சில தினங்களுக்கு முன்பு அனிதாவிடம் 2½ பவுன் நகை பறித்ததும் விசாரணையில் தெரிய வந்தது.

அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். 10½ பவுன் நகை, மோட்டார் சைக்கிள் ஆயிரம் ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News