வேப்பங்குப்பம் ஊராட்சியில் தூய்மை பணியாளர்கள் கவுரவிப்பு
- கிராம சபை கூட்டம் நடந்தது
- ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த வேப்ப ங்குப்பம் ஊராட்சியில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.
ஊராட்சி மன்ற தலைவர் சுகன்யா உமாபதி தலைமை தாங்கினார். ஊராட்சியில் தொடர்ந்து ஓய்வின்றி பணி யாற்றிக் கொண்டிருக்கும் தூய்மை பணியாளர்களுக்கு மாலை மற்றும் சால்வை அணிவித்து கவுர விக்கப்பட்டது. மேலும் மழைக்காலங்களில் பாதுகாப்புடன் பணியாற்ற அவர்களுக்கு முன்னெச்ச ரிக்கை உபகரண பொ ருட்கள் வழங்கப்பட்டன.
இந்த கூட்டத்தில் வேப்பங்குப்பம் ஏரிக்கு வரக்கூடிய நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. அதனை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏரியை தூர்வாரி, கரையை பலப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
இதில் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் உள்பட 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.