உள்ளூர் செய்திகள்

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் இன்று நடந்தது

காட்பாடியில் புதிய ரெயில்வே மேம்பாலம் அமைக்க பணிகள் தொடக்கம்

Published On 2023-03-24 09:48 GMT   |   Update On 2023-03-24 09:48 GMT
  • உழவர் சந்தை விரைவில் இடமாற்றம்
  • விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் கலெக்டர் தகவல்

வேலூர்:

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைவு தீர்வு கூட்டம் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் இன்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, வன அலுவலர் பிரின்ஸ் குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

வேலூர் மாவட்டத்தில் வனவிலங்குகளால் ஏற்படும் இழப்பீடுகளுக்கு வனத்துறை சார்பில் முறையாக இழப்பீட்டுத் தொகை வழங்கப்படுவதில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டினர்.

அப்போது வனத்துறை அலுவலர்களுக்கும் விவசாயிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. விவசாயி ஒருவர் அதிகாரிகளை பார்த்து கைநீட்டி பேசினார்.

இதனை கண்ட மாவட்ட வருவாய் அலுவலர் அதிகாரிகளை பார்த்து கைநீட்டிய விவசாயியை வெளியேறும்படி கூறினார்.அவருக்கு ஆதரவாக மற்ற விவசாயிகளும் அரங்கத்தை விட்டு வெளியே செல்வோம் என தெரிவித்தனர்.

பின்னர் விவசாயிகள் சார்பில் வருத்தம் தெரிவித்தனர். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

ஒடுகத்தூர் அணைக்கட்டு பகுதியில் காட்டு எருமைகள் தொல்லை அதிக அளவில் உள்ளது.இதனை கட்டுப்படுத்த வேண்டும். குடியாத்தம் பேரணாம்பட்டு பகுதியில் அடிக்கடி காட்டு யானைகள் தொல்லை நீடித்து வருகிறது.

அதனை கட்டுப்படுத்த வனத்துறை அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. யானைகள் வரும்போது வனத்துறையினர் உடனடியாக வருவதில்லை.

சென்னை பெங்களூர் விரைவு சாலை திட்டம் மேல் பாடி பகுதியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த சாலைக்காக நீர் நிலைகள் மூடப்படுகிறது. கால்வாய்கள் அடைக்கப்படுகின்றன.

அதனை தடுத்து நிறுத்த வேண்டும் தற்போது கோடை காலம் என்பதால் விவசாயத்திற்கு தடையின்றி மின்சாரம் கிடைக்க கூடுதல் மின்மாற்றிகளை அமைக்க வேண்டும்.

உழவர் சந்தைகளுக்கு கொண்டு செல்லும் காய்கறிகளுக்கு அரசு பஸ்களில் டிக்கெட் வசூல் செய்வதை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

கூட்டத்தில் பேசிய விவசாயி ஒருவர் காட்பாடி உழவர் சந்தை யில் கீரைகள் விற்பனை செய்வதற்கு வசதி ஏற்படுத்த வேண்டும் என கூறினார்.

இதற்கு பதில் அளித்த கலெக்டர் குமாரவேல் பாண்டியன் காட்பாடி உழவர் சந்தை அமைந்திருக்கக் கூடிய பகுதியில் புதிதாக ரெயில்வே மேம்பாலம் விரைவில் கட்டப்படவுள்ளது.

இதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கப்ப ட்டுள்ளன. எனவே காட்பாடி உழவர் சந்தை விரைவில் இடமாற்றம் செய்யப்படும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News