- 5 நாட்கள் நடக்கிறது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
குடியாத்தம்:
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் கிராம குடிநீர் திட்டக் கோட்டம் வேலூர் மாவட்டம் மூலமாக ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் கிராம குடிநீர் வழங்கல் மற்றும் சுகாதார குழு உறுப்பினர்களுக்கு களநீர் பரிசோதனை முகாம் குடியாத்தம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் 50 ஊராட்சிகளை சேர்ந்த 250 பேருக்கு 5 நாட்கள் பயிற்சி முகாம் நடைபெறுகிறது இந்த பயிற்சி முகாமில் கிராம குடிநீர் மற்றும் சுகாதாரக் குழு உறுப்பினர்களுக்கு நீர் மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்யும் முறைகள் மற்றும் களநீர் பரிசோதனை பயன்கள், கையாளும் முறைகள், மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், நுண்ணுயிர் பரிசோதனைக்கு நீர் சேகரிக்கும் முறை உள்ளிட்ட வை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்த பயிற்சி முகாமில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி பொறியாளர் குமரவேல் மற்றும் சேவ் அறக்கட்டளை உறுப்பினர்கள் பயிற்சி அளித்தனர்.
இந்த பயிற்சி முகாமில் கலந்து கொண்ட கிராம குடிநீர் மற்றும் சுகாதார குழு உறுப்பினர்களுக்கு களநீர் பரிசோதனைக்கான பயிற்சி கையேடுகளை ஒன்றிய குழு தலைவர் என்.இ.சத்யானந்தம் வழங்கினார்.நிகழ்ச்சியில் அரசு மருத்துவமனை ஆலோசனைக்குழு உறுப்பினர் நத்தம்பிரதீஷ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.