உள்ளூர் செய்திகள்

வேலூரில் அமைச்சர் துரைமுருகனுடன் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் சந்திப்பு

Published On 2023-04-09 09:16 GMT   |   Update On 2023-04-09 09:16 GMT
  • கோரிக்கை மனு வழங்கினர்
  • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தனர்

வேலூர்:

வேலூரில் ஜாக்டோ ஜியோ பேரமைப்பு நிர்வாகிகள் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனையும், அணைக்கட்டு எம்.எல்.ஏ. நந்தகுமாரையும், கதிர் ஆனந்த் எம்.பி.யையும் இன்று சந்தித்து கோரிக்கைகள் அடங்கிய மனுவினை வழங்கினர்.

முதல்-அமைச்சரின் கனிவான கவனத்திற்கு கோரிக்கை மனுவை கொண்டு சென்று நிறைவேற்றி தருமாறு கேட்டுக்கொண்டனர்.

நேற்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோரை ஜாக்டோ ஜியோ ஒருங ்கிணைப்பாளர்களுடன் பேச்சு வார்த்தைக்கு அனுப்பி பேச வைத்து கோரிக்கைகளின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்ததற்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஜாக்டோ ஜியோ பேரமைப்பின் சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.

இந்த சந்திப்பின் போது மாநில உயர்மட்ட குழு உறுப்பினர்கள் செ.நா.ஜனார்த்தனன், அ. சேகர், துரை.கருணாநிதி, அக்ரி ராமன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஏ.சீனிவாசன் ஜி.சீனிவாசன் மாவட்ட உயர்மட்ட குழு உறுப்பினர்கள் ஜி.டி.பாபு, தியாகராஜன், குமார், பெ.இளங்கோ அல்போன்ஸ் கிரி சுமதி, பா வேலு, ஜி.சுந்தர லட்சுமி கல்லூரி ஆசிரியர் கழக விஜயன் அனைத்து வகை ஆசிரியர் சங்க நிர்வாகிகள் அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News