தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்
- கலெக்டர் தொடங்கி வைத்தார்
- ஏராளமாேனார் கலந்து கொண்டனர்
வேலூர்:
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் துறையின் பயனாளர்களான முதல் 6 மாதம் வரை கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தை களின் தாய்மார்களுக்கு 2 ஊட்டச்சத்து பெட்டகங்களும் 6 மாதம் வரை மிதமான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தை களின் தாய்மார்களுக்கு ஒரு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்குவது, மேலும் 6 மாதம் முதல் 6 வயது வரையுள்ள கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு 8 வாரங்களுக்குப் சத்தான ஊட்டச்சத்து வழங்கி குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையினை மேம்படுத்துவதாகும்
வேலூர் மாவட்டத்தில் முதல் 6 மாதம் வரை கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள 215 குழந்தை களின் தாய்மார்களுக்கு 430 எண்ணிக்கையிலான ஊட்டச்சத்து பெட்டகம் தொகுப்பும், 0 மாதம் முதல் 6 மாதம் வரை மிதமான ஊட்டச்சத்து குறைபாடுள்ள 1206 குழந்தைகளின் தாய்மார்களுக்கு 1206 எண்ணிக்கையிலான ஊட்டச்சத்து பெட்டகம் தொகுப்பும், மொத்தம் 1636 ஊட்டச்சத்து பெட்டகம் தொகுப்பு வழங்கப்பட உள்ளது.
மேலும் 6 மாதம் முதல் 6 வயது வரையுள்ள கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள 1027 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தினை வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் இன்று பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கி "ஊட்டச்சத்தை உறுதிசெய்" திட்டத்தினை தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட முழுவதும் குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்க படுகிறது.