வேலூர் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை இடம் ஆக்கிரமிப்பு
- வணிகர்கள் திடீர் சாலை மறியல்
- போலீசார் பேச்சுவார்த்தை
வேலூர்:
வேலூர் அடுத்த கொணவட்டம் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய சர்வீஸ் சாலையில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது.
பள்ளி நிர்வாகத்தனர் தேசிய நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் அருகில் உள்ள லாரி மெக்கானிக் ஷெட்டுகளுக்கு லாரிகள் செல்ல முடியவில்லை. ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என பள்ளி நிர்வாகத்திடம் கூறிய போது அவர்கள் அலட்சியமாக பதில் அளித்து உள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த அருகில் உள்ள கடை வியாபாரிகள் மற்றும் லாரி மெக்கானிக்குகள் இன்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த டிஎஸ்பி திருநாவுக்கரசு வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறிய லில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.