சேற்றில் சிக்கிய லாரியில் ரேசன் அரிசி பறிமுதல்
- 25 டன் சிக்கியது
- சர்க்கரை மூட்டையில் வைத்து கடத்தினர்
குடியாத்தம்:
குடியாத்தம் அடுத்த கூட நகரம் ஏரிக்கரை கடந்த ஆண்டு பழுதடைந்து பல மீட்டர் தூரத்திற்கு கீழே இறங்கியது.நீர்வள ஆதாரத்துறையினர் மணல் மூட்டைகளை அடுக்கி தற்காலிகமாக ஏரிக்கரையை சீர் செய்து இருந்தனர்.
இந்நிலையில் நேற்று அணங்காநல்லூர் கிராமத்திலிருந்து குடியாத்தம் நோக்கி கர்நாடக பதிவெண் கொண்ட லாரி ஒன்று கூட நகரம் ஏரிக்கரை மீது வந்துள்ளது. பழுதடைந்து இருந்த ஏரிக்கரை பகுதியில் லாரி வந்தது.
சில நாட்களாக பெய்த மழையினால் ஏரிக்கரை சேரும் சகதியாக இருந்தது. அதில் லாரியின் சக்கரங்கள் சிக்கியது. லாரியை அதிலிருந்து வெளியே எடுக்க முடியவில்லை. அவர்களிடம் கிராம மக்கள் வசாரித்தனர்.
லாரி டிரைவர் மற்றும் லாரியில் இருந்தவர்கள் முன்னுக்கு பின்னாக பேசினர். கிராம மக்கள் அவர்களிடம் தொடர்ந்து விசாரிக்கவே அவர்கள் அங்கிருந்து நைசாக நழுவி விட்டனர்.
இது குறித்து வருவாய்த்துறைக்கும் மாவட்ட கலெக்டருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
மாவட்ட வழங்கல் அலுவலர் சுமதி, குடியாத்தம் உதவி கலெக்டர் வெங்கட்ராமன் ஆகியோர் மேற்பார்வையில் குடியாத்தம் வட்ட வழங்கல் அலுவலர் தேவி, வருவாய் ஆய்வாளர்கள் ஜோதி இராமலிங்கம், சுகந்தி உள்ளிட்டோர் விரைந்து சென்று அந்த லாரியை சோதனை செய்தனர்.
லாரியில் பிளாஸ்டிக் பைகளால் ஆன மூட்டைகள் இருந்துள்ளது சந்தேகம் கொண்டு அந்த மூட்டைகளை மேலிருந்து பார்க்கும்போது சர்க்கரை மூட்டை காண பிளாஸ்டிக் பை இருந்தது. உள்ளே ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது இதனையடுத்து உடனடியாக இரண்டு மாற்று லாரிகள் கொண்டுவரப்பட்டு தொழிலாளர்கள் மூலம் சுமார் 25 டன் இருந்து 480 அரிசி மூட்டைகளை மற்ற லாரிகளுக்கு மாற்றினார்கள்.பாக்கம் கிராமத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைத்தனர்.