உள்ளூர் செய்திகள்

சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளுக்கு ரூ.2000 அபராதம்

Published On 2022-10-28 10:23 GMT   |   Update On 2022-10-28 10:23 GMT
  • 5 மாடுகள் பிடிக்கப்பட்டன
  • அதிகாரிகள் எச்சரிக்கை

வேலூர்:

வேலூர் மாநகராட்சி பகுதியில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள மாடுகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. தேசிய நெடுஞ்சாலை அண்ணா சாலை உள்ளிட்ட இடங்களில் அதிக அளவில் மாடுகள் சுற்றி திரிகின்றன.

சத்துவாச்சாரி ரோட்டில் சாலையை ஆக்கிரமித்து ஏராளமான மாடுகள் படுத்து கிடக்கின்றன.

மாடுகளை கட்டவிழ்த்து விடும் உரிமையாளர்களுக்கு பலமுறை எச்சரிக்கை விடுத்தும் மாடுகள் சுற்றி திரிவதை அவர்கள் நிறுத்தவில்லை.

இந்த நிலையில் வேலூர் மாநகராட்சி 2-வது மண்டல சுகாதார அலுவலர் லூர்து சாமி தலைமையில் வேலூர் அலமேலுமங்காபுரம் முதல் சத்துவாச்சாரி வரை தேசிய நெடுஞ்சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளை பிடித்தனர். மொத்தம் 5 மாடுகள் பிடிக்கப்பட்டன. இதில் 4 மாடுகள் மாநகராட்சி கோசாலையில் அடைக்கப்பட்டன. 3 மாடுகளின் உரிமையா ளர்கள் அங்கு வந்து விட்டு விடும்படி அதிகாரிகளிடம் கேட்டனர்.

இதனை தொடர்ந்து அந்த மாடுகளுக்கு தலா ரூ.2000 விதம் 4 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூல் செய்து விட்டு மாடுகளை ஒப்படைத்தனர்.

சாலையில் மாடுகளை திரிய விட்டால் அபராதம் விதிப்பது தொடரும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News