உள்ளூர் செய்திகள்

கழிவுநீர் கால்வாய் அடைப்பு அகற்றும் பணி - கலெக்டர் ஆய்வு

Published On 2022-07-18 09:30 GMT   |   Update On 2022-07-18 09:30 GMT
  • குடியாத்தம் நகராட்சி பகுதியில் நடந்தது
  • பணியாளர்களுக்கு அறிவுரை

குடியாத்தம்:

வேலூர் மாவட்டம் குடியாத் தம் நகராட்சி 13-வது வார்டுக்குட்பட்ட காட்பாடி ரோடு என்.ஜி.ஓ காலனியில் நேற்று முன்தினம் மாலை பெய்த மழை யால் அப்பகுதியில் உள்ள கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலைகளில் செல்ல ஆரம்பித்தது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் நகரமன்ற தலைவர் எஸ்.சவுந்தரரா சன், நகரமன்ற உறுப்பினர் பி.மேகநாதன், தூய்மை பணி ஒருங்கிணைப்பாளர் பிரபுதாஸ் உள்ளிட்டோர் விரைந்து சென்று நகராட்சி தூய்மை பணியாளர்கள் உதவியுடன் பொக் லைன் எந்திரம் மூலமாக கால்வாய்களில் அடைப்புகளை அகற்றி கழிவுநீர் சீராக செல்ல நடவடிக்கை எடுத்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த கலெக்டர் குமாரவேல் பாண்டியன் நகராட்சி சார்பில் கழிவுநீர் கால்வாய்களில் அடைப்புகளை அகற்றும் பணிகளை ஆய்வு செய்தார்.

தொடர்ந்து தூய்மை பணியாளர்களுக்கு அப்பகுதியில் கழிவுநீர் சீராக செல்ல செய்ய வேண்டிய பணிகள் குறித்து அறிவுரைகளை வழங்கினார்.

அப்போது குடியாத்தம் உதவி கலெக்டர் தனஞ்செயன், வருவாய்த்துறையினர் மற்றும் நகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர். 

Tags:    

Similar News