உள்ளூர் செய்திகள்

குடியாத்தத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் உதவி கலெக்டர் வெங்கட்ராமன் தலைமையில் நடைபெற்றது.

திருப்பத்தூர் சர்க்கரை ஆலைக்கு கரும்புகள் கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும்

Published On 2023-01-11 09:36 GMT   |   Update On 2023-01-11 09:36 GMT
  • பேரணாம்பாட்டு, மேல்பட்டி பகுதி விவசாயிகள் வலியுறுத்தல்
  • குடியாத்தத்தில் குறைதீர்வு கூட்டம் நடந்தது

குடியாத்தம்:

குடியாத்தம் வருவாய் கோட்டத்திற்குட்பட்ட குடியாத்தம், கே.வி. குப்பம், பேர்ணாம்பட்டு தாலுகா பகுதிகளை சேர்ந்த விவசாயிகளின் குறைதீர்க்கும் கூட்டம் குடியாத்தம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உதவி கலெக்டர் எம்.வெங்க டராமன் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு வருவாய்த்துறை மின்வாரியம், வனத்துறை, நெடுஞ்சாலைதுறை, நீர்வளத்துறை, வேளாண்மைதுறை, தோட்டக்கலைத்துறை, உழவர் சந்தை அதிகாரிகள் என பல்வேறு அதிகாரிகள் முன்னிலை வகித்தனர்.உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் கலைவாணி அனைவரையும் வரவேற்றார்.

விவசாயிகள் பேசுகையில்:-

பேர்ணாம்பட்டு, மேல்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்களின் கரும்புகளை திருப்பத்தூர் சர்க்கரை ஆலைக்கு கொண்டு செல்ல அனுமதி வழங்க வேண்டும், பேர்ணாம்பட்டு பகுதியில் வனவிலங்குகள் விளைநிலங்களுக்குள் புகுந்து பெருத்த சேதத்தை ஏற்படுத்தி வருகிறது யானைகள் மீண்டும் பயிர்களை சேதப்படுத்தி வருகிறது வனத்துறை உரிய நடவடிக்கை எடுப்பதில்லை விவசாயிகள் மீது பொய்யாக வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர் இதுவரை வழக்கு ரத்து செய்யப்படவில்லை வனவிலங்குகள் விளைநிலங்களுக்கு புகுவது தடுக்க வனத்துறையினர் எந்த நடவடிக்கை எடுப்பதில்லை தொடர்ந்து இதே போல் இருந்தால் விரைவில் முதல்வர் அலுவலகம் முற்றுகையிடுவோம் என தெரிவித்தனர்.கவுரப்பேட்டை ஏரிக்கரையை உயர்த்த வேண்டும் தண்ணீர் செல்லும் பகுதியே உடைப்பு ஏற்படுத்தி விட்டனர் இதனால் தண்ணீர் நிற்பதில்லை அதை உடனடியாக சீர் செய்து தர வேண்டும்.

பல ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்ட குடியாத்தம் சந்தப்பேட்டை பகுதியில் மீண்டும் கால்நடை சந்தை அமைக்க வேண்டும்

மேல்ஆலத்தூர் ெரயில்வே பாலத்தின் கீழ் அடிக்கடி தண்ணீர் தேங்கி பள்ளங்களாக உள்ளன உடனடியாக சீர் செய்ய வேண்டும் கூட நகரம் ரயில்வே மேம்பால பணிகள் உடனடியாக தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.

இதற்கு பதில் அளித்த குடியாத்தம் உதவி கலெக்டர் வெங்கட்ராமன் விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார் இக்கூட்டத்தில் ஏராளமான அரசு அதிகாரிகளும் விவசாயிகளும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News