கோவிலில் திருடிய வாலிபரை கம்பத்தில் கட்டி வைத்து அடி, உதை
- கண்காணிப்பு கேமராவில் சிக்கினார்
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் மாவட்டம் குடி யாத்தம் அடுத்த புவனேஸ் வரிபேட்டையில் ஸ்ரீமுத் துமாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் அம்மனுக்கு பூஜைகள் நடைபெறும்.
வெள்ளிக்கிழமை மற்றும் விசேஷ நாட்களில் அம்ம னுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது. இத னால் அதிகளவு பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல் கின்றனர்.
இந்நிலையில் கடந்த 7-ந்தேதி கோவிலுக்கு பூசாரி வந்தபோது, கோவி லுக்குள் இருந்த மைக்செட், ஸ்பீக்கர் உள்ளிட்ட சுமார் ரூ.50 ஆயி ரம் மதிப்பிலான பொருட் கள் திருட்டு போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து குடியாத்தம் டவுன் போலீசில் கோவில் நிர்வாகத்தினர் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிலில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர்.
அதில் ஒரு வாலிபர் கோவிலுக்குள் நுழைந்து, பொருட்களை திருடிச் செல்வது பதிவாகி இருந்தது. தொடர்ந்து அந்த வாலிபர் குறித்து விசாரித்ததில் அதே பகுதியைச் சேர்ந்த நித்தியானந்தம் (வயது 22) என்பது தெரிந்தது.
இந்த நிலையில் நேற்று புவனேஸ்வரி பேட்டையில் சுற்றி திரிந்த நித்தியா னந்தத்தை பொதுமக்கள் பிடித்து மின் கம்பத்தில் கட்டி வைத்து சரமாரியாக அடித்து உதைத்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த குடியாத்தம் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நித்தியானந்தத்தை மீட்டனர்.
பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் கோவிலில் பொருட்களை திருடியது தெரிய வந்தது. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.