- போலீசார் வழக்கு பதிவு
- போக்சோ சட்டத்தில் 4 பேர் கைது
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளியின் மகள் வயது 17, பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார்.
இந்நிலையில் கூலித் தொழிலாளியின் மகள் 2 மாதங்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியே சென்றவர் அதன் பின் வீடு திரும்பவில்லை பல இடங்களில் தேடிய அந்தப் பெண்ணின் பெற்றோர்கள் குடியாத்தம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
குடியாத்தம் தாலுக்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். குடியாத்தம் அடுத்த பரவக்கல் கிராமத்தைச் சேர்ந்த பழனியின் மகன் பரசுராமன் (வயது 18)என்பவர் அந்த பெண்ணை கடத்திச் சென்று பேர்ணாம்பட்டு பகுதியில் உள்ள ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது.
இதனையடுத்து குடியாத்தம் தாலுகா போலீசார் மைனர் பெண்ணை கடத்திச் சென்று திருமணம் செய்துகொண்ட வாலிபர் பரசுராமனை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர்.
இந்த வழக்கில் மைனர் பெண்ணை கடத்திச் சென்று திருமணம் செய்ய உதவியதாக சிலர் மீது குடியாத்தம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர்.
நேற்று தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் தலைமையி லான போலீசார் இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த குடியாத்தம் அடுத்த உப்பரப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த அபிநாத் (18), பெரும்பாடி கிராமத்தைச் சேர்ந்த ஆகாஷ் வயது (20), சின்ன ராஜாகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் (20), ஜிட்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த அஜய் (21) ஆகிய 4 பேரை 2 மாதங்களுக்குப் பிறகு நேற்று போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.