உள்ளூர் செய்திகள்

வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளித்தவர்களிடம் விசாரணை நடத்திய காட்சி.

வேலூர் எஸ்.பி. ஆபிசில் குறை தீர்வு கூட்டம்

Published On 2023-01-04 09:39 GMT   |   Update On 2023-01-04 09:39 GMT
  • டி.ஐ.ஜி, எஸ்.பி மனுக்களை பெற்றனர்
  • ஆலோசனை மேற்கொள்ள போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு

வேலூர்:

வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொதுமக்கள் குறைவு முகாம் இன்று காலை நடைபெற்றது.முகாமிற்கு வேலூர் சரக டிஐஜி முத்துசாமி தலைமை தாங்கினார்.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் முன்னிலை வகித்தார்.மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது குறைகள் மற்றும் புகார்களை மனுக்களாக அளித்தனர்.

பெறப்பட்ட மனுக்களை அந்தந்த பிரிவு அலுவலர்களுக்கும் அனுப்பி வைத்து நடவடிக்கை எடுக்க டி.ஐ.ஜி. உத்தரவிட்டார்.

குடியாத்தம் தாலுகாவை சேர்ந்த ஒருவர் மனு அளித்தார். அந்த மனுவில் தனது சொந்த நிலத்தில் செல்போன் டவர் அமைக்க அருகில் இருப்பவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாக தெரிவித்திருந்தார்.

மனுவை பெற்றுக்கொண்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும் வணிகர் சங்க நிர்வாகிகள் அளித்த மனுவில், அண்ணா கலையரங்கம் அருகே பொங்கல் பண்டிகை முன்னிட்டு கரும்புகளை லாரியில் கொண்டு வந்து விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதனால் கரும்பு வியாபாரம் செய்யும் வியாபாரிகள் பலர் பாதிப்படைகின்றனர்.எனவே சற்று தொலைவில் பெரியார் பூங்கா அருகே அவர்கள் கரும்பு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.

மனுவை பெற்றுக் கொண்ட போலீஸ் சூப்பிரண்டு வணிகர்களையும், சம்பந்தப்பட்ட கரும்பு வியாபாரிகளும் அழைத்து ஆலோசனை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர்.

Tags:    

Similar News