உள்ளூர் செய்திகள்

பெண் கைதிகள் உறவினர்களிடம் வீடியோ கால் பேசும் வசதியை சிறைத்துறை டிஐஜி செந்தாமரைக்கண்ணன் தொடங்கி வைத்த காட்சி.

வேலூர் பெண்கள் சிறையில் கைதிகள் குடும்பத்தினருடன் பேச வீடியோ கால் வசதி

Published On 2023-04-15 09:26 GMT   |   Update On 2023-04-15 09:26 GMT
  • ஜெயில் டி.ஐ.ஜி. தொடங்கி வைத்தார்
  • மாதத்திற்கு 10 நாட்கள் பேசலாம்

வேலூர்:

தமிழகத்தில் ஒன்பது மத்திய சிறைகள் உட்பட 142 சிறைகளில் 12 ஆயிரத்திற்கு மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். சிறைத்துறை டிஜிபியாக அமரேஷ் பூஜாரி பதவி ஏற்ற பின் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில் சட்டசபையில் நடந்த கூட்டத்தின் போது சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் தங்களது உறவினர்களிடம் வீடியோ கால் பேசும் வசதி ஏற்படுத்தி தரப்படும் என தெரிவித்து இருந்தார்.

அதன்படி நேற்று சென்னை புழல் சிறையில் கைதிகள் தங்களது உறவினர்களிடம் வீடியோ கால் பேசும் வசதியை டிஜிபி அமரேஷ் பூஜாரி தொடங்கி வைத்தார். கொரோனா காலத்தில் கைதிகளின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் வேலூர் ஆண்கள் சிறையில் ஏற்கனவே வீடியோ கால் வசதி செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் வேலூர் பெண்கள் தனி சிறையில் கைதிகள் தங்களது உறவினர்களிடம் வீடியோ கால் பேசும் வசதியை வேலூர் சிறைத்துறை டிஐஜி செந்தாமரைக்கண்ணன் இன்று காலை தொடங்கி வைத்தார்.

பெண் கைதிகள் தங்களது உறவினர்களிடம் 3 நாளைக்கு ஒருமுறை 12 நிமிடங்கள் பேசலாம். அல்லது மாதத்திற்கு 10 நாட்கள் பேசலாம் என்பதற்கு ஏற்ப வசதி செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News