உள்ளூர் செய்திகள்

குடியாத்தம் நகர மன்ற கூட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.

ரூ.13 கோடியில் குடிநீர் திட்ட பணிகள்

Published On 2022-10-01 09:15 GMT   |   Update On 2022-10-01 09:15 GMT
  • குடியாத்தம் நகர மன்ற கூட்டத்தில் தகவல்
  • பழுதடைந்த குடிநீர் தொட்டியை சரிசெய்ய கோரிக்கை

குடியாத்தம்:

குடியாத்தம் நகர மன்ற சாதாரண கூட்டம் நகர மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராசன் தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர மன்ற துணைத் தலைவர் எம்.பூங்கொடி மூர்த்தி, நகராட்சி ஆணையாளர் ஏ.திருநாவுக்கரசு, பொறியாளர் பி.சிசில்தாமஸ், சுகாதார அலுவலர் முகைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நகரமன்ற உறுப்பினர் மனோஜ் பேசுகையில் எனது வார்டில் 10 நாட்களாக தண்ணீர் வரவில்லை.

கவிதா பாபு எனது வார்டில் போர் ரிப்பேர் ஆகிவிட்டது. அதனை பொதுமக்களுடைய பணத்தின் மூலம் சரி செய்யப்பட்டது நகராட்சி அதிகாரிகள் சரி செய்யவில்லை என குற்றம் சாட்டினார். மேலும் எனது வார்டில் சில பகுதிகளில் கால்வாய் தூர்வார வேண்டும் என்றார்.

ஜாவித் அகமது பேசுகையில்:- எனது வார்டில் கால்வாய் தூர் வாரி துப்புரவு பணி மேற்கொள்ள வேண்டும்.

ஆட்டோ மோகன் ஒவ்வொரு வார்டிற்க்கும் துப்புரவு பணி மேற்கொள்ள கூடுதலாக பணியாளர்களை நியமிக்க கேட்டிருந்தோம் உடனடியாக நியமித்து தர வேண்டும்.

சிட்டிபாபு பேசுகையில் காந்தி சிலை பின்புறம் உள்ள டேங்க் பழுதடைந்துள்ளது உடனடியாக சரிசெய்து தர வேண்டும்

தீபிகா பேசுகையில் செருவங்கி பகுதியில் கால்வாய் கட்டப்பட்டுள்ளது இன்னும் சிறிது தூரம் கால்வாய் கட்ட வேண்டும் உடனடியாக கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெரும்பாலான உறுப்பினர்கள் குடியாத்தம் நகராட்சி பகுதியில் தெரு நாய்கள் அதிக அளவில் உள்ளன. பொதுமக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. தெரு நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த நகரமன்ற தலைவர் எஸ். சவுந்தரராசன் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட பைப்புகள் சில தினங்களுக்கு முன் பழுதாகிவிட்டது பைப்புகள் சீர் செய்யப்பட்டு வருகிறது. அதற்கு மாற்றாக பசுமாத்தூரிலிருந்து தண்ணீர் தரப்பட்டு வருகிறது.அமிர்தம் திட்டத்தின் கீழ் 13 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. அடுத்த மாதம் இதற்கான டெண்டர் விடப்பட உள்ளது. இப்பணிகள் ஓராண்டுக்குள் முடிவடையும் இப்பணிகள் நிறைவு பெற்றால் குடியாத்தம் நகரில் உள்ள 36 வார்டுகளுக்கும் தினம் தோறும் குடிநீர் கிடைக்கும்.

குடியாத்தம் நகராட்சியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் கொசு மருந்து அடிக்க நடவடிக்கை எடுக்கப்படும், கால்வாய்கள் தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும்.

குடியாத்தம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தி அதற்காக முதல் கட்டமாக பணிகள் மேற்கொள்ள 39 கோடி ரூபாய் ஒதுக்கிய தமிழக முதல்வருக்கும், தமிழக அரசுக்கும் நகர் மன்றம் சார்பில் நன்றியும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

குடியாத்தம் நகர மன்றத்தின் முதல் நகர மன்ற தலைவர் மறைந்த எம்.வேலாயுதம் முதலியார் நினைவாக அவரது குடும்பத்தினர் சுமார் 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குடியாத்தம் நகராட்சி வளாகத்தில் நகரமன்ற தலைவருக்கான அலுவலகம் கட்டி தர உள்ளார்கள் அதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்தில் நகர் மன்ற உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கை குறித்து பேசினார்கள்.

Tags:    

Similar News