வேலூர் பழனி ஆண்டவர் கோவிலில் யாகசாலை பூஜைகள் தொடங்கியது
- 6-ந்தேதி கும்பாபிஷேகம்
- நவக்கிரக ஹோமம் தீபாராதனை நடைபெற்றது
வேலூர்:
வேலூர் ஆற்காடு சாலையில் உள்ள சைதாப்பேட்டை பழனி ஆண்டவர், அய்யப்பன் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா வருகிற 6-ந் தேதி நடக்கிறது.
இந்த கோவிலில் உள்ள பழனி ஆண்டவர், ஐயப்பன் ஸ்ரீ ராமர் காசி விஸ்வநாதர் சனி பகவான் மற்றும் பரிவார மூர்த்திகள் சன்னதிகள் புதுப்பிக்கப்ப ட்டுள்ளன.
கும்பாபிஷே கத்தையொட்டி இன்று காலை யாகசாலை பூஜைகள் தொடங்கியது. காலை 9 மணிக்கு விக்னேஸ்வர பூஜை கோ பூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின.தொடர்ந்து கணபதி ஹோமம் நவக்கிரக ஹோமம் தீபாராதனை நடைபெற்றது.
நாளை தன பூஜை மகாலட்சுமி யாகம், 5-ந் தேதி 2-ம் கால யாக பூஜைகள் நடக்கிறது. 6-ந் தேதி காலை நான்காம் கால யாக பூஜைகள் நடக்கிறது. தொடர்ந்து 9. 45 மணிக்கு கோவிலில் மகா கும்பாபி ஷேகம் நடைபெறுகிறது.
இதில் சக்தி அம்மா, ரத்தினகிரி பாலமுருகன் அடிமை சாமிகள், கலவை சச்சிதானந்த சாமிகள், பேரூர் ஆதீனம் மருதாச்சல அடிகளார், தேவ பிரகாஷ் ஆனந்த சாமிகள்ஆகியோர் கலந்து கொண்டு அருளாசி வழங்குகின்றனர். சிறப்பு அழைப்பாளர்களாக கார்த்திகேயன் எம்.எல்.ஏ. மேயர் சுஜாதா, முன்னாள் எம்எல்ஏ ஞானசேகரன், கவுன்சிலர் சந்திரசேகரன், மம்தா குமார் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.
கும்பாபிஷேக ஏற்பாடுகளை ஸ்ரீ பழனி ஆண்டவர் ஆலய நிர்வாகிகள் ஸ்ரீ வீரபத்திர சுவாமி நிர்வாக அறக்கட்டளை ஸ்ரீ பம்பாவாசன் பக்த சபையினர் , சைதாப்பேட்டை வாசிகள் செய்து வருகின்றனர்.