உள்ளூர் செய்திகள்

மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் தவழ்ந்த நவநீதகிருஷ்ணன் வீதி உலா வந்த காட்சி.

அம்மாபேட்டை கோதண்டராமர் கோவிலில் வெண்ணைத்தாழி நவநீத சேவை

Published On 2023-04-06 09:24 GMT   |   Update On 2023-04-06 09:24 GMT
  • அம்மாப்பேட்டை கோதண்டராம சுவாமி கோவிலில் ராமநவமி பெருவிழா தொடங்கியது.
  • மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் தவழ்ந்த நவகிருஷ்ணன் அலங்காரத்துடன் எழுந்தருளினார்.

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்டம், அம்மாப்பேட்டை கோதண்டராம சுவாமி மற்றும் ஜெயவீர ஆஞ்சநேயர் கோவிலில் ராமநவமி பெருவிழா கடந்த 30ம் தேதி ஏகாந்த சேவையுடன் தொடங்கியது.

தொடர்ந்து தினம் தோறும் பல்லக்கு, சேஷ வாகனம், கருடசேவை, ஹனுமார் வாகனம், யானை வாகனம், திருக்கல்யாணம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைப்பெற்றன.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வெண்ணைத்தாழி நவநீத சேவை நடந்தது.

மலர்களால் அலங்கரி க்கப்பட்ட பல்லக்கில் தவழ்ந்த நவ கிருஷ்ணன் அலங்கா ரத்துடன் எழுந்தருளினார்.

கோவில் மண்டபத்தில் நவநீத கிருஷ்ணனுக்கு சோடப உபச்சாரம் நடந்து மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

பின்னர் பல்லக்கு கோவிலை வலம் வந்த நவநீத கிருஷ்ணர் நகரில் வீதி உலா வந்தது.

வீடுகள் தோறும் பக்தர்கள் பூஜை செய்து வழிப்பட்டனர்.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News