சிதம்பரத்தில் துணிகரம்: ஜவுளி-செருப்பு கடைகளை உடைத்து கொள்ளை
- சிதம்பரத்தில் ஜவுளி-செருப்பு கடைகளை உடைத்து கொள்ளையடிக்கப்பட்டது.
- வியாபாரம் முடிந்ததும், கடை உரிமை யாளர்கள் தங்களது கடைகளை பூட்டிவிட்டு வீடுகளுக்கு சென்றனர். நள்ளிரவு நேரம் மர்ம நபர்கள் அங்கு வந்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் சிதம் பரம் மாலைகட்டி தெரு நகராட்சி நடுநிலை பள்ளி எதிரே வணிக வளாகம் உள்ளது. இந்த வளாகத்தில் ஜவுளி மற்றும் செருப்புக்கடை உள்ளிட்ட பல்வேறு கடைகள் உள்ளது. நேற்று இரவு வியாபாரம் முடிந்ததும், கடை உரிமை யாளர்கள் தங்களது கடைகளை பூட்டிவிட்டு வீடுகளுக்கு சென்றனர். நள்ளிரவு நேரம் மர்ம நபர்கள் அங்கு வந்தனர். அவர்கள் ஜவுளிக்கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அங்கிருந்த துணிகளை திருடி சென்றனர். இேத போன்று செருப்புக் கடையை உடைத்து புகுந்த கொள்ளையர்கள் அங்கி ருந்த பணத்தை கொள்ளை யடித்து சென்ற–னர்.
இந்த வணிகவளாகம் ஆட்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியாகும். இன்று காலை கடைகள் திறந்து இருந்ததால் அக்கம் பக்கம் உள்ளவர்களுக்கு சந்தேகம் எழுந்தது. இதுபற்றி உரியைாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த உரிமை யாளர்கள் கடைகளுக்கு விரைந்தனர். அப்போது ஜவுளிக்கடையில் ரூ.1 லட்சம் மதிப்பிலான துணிகள் கொள்ளையடிக்கப் பட்டிருந்தது. இதுபற்றி சிதம்பரம் டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறர்கள். சிதம்பரம் நகர் பகுதியில் கடந்த சில நாட்களாகவே தொடர் கொள்ளை சம்ப–வங்கள் நடந்து வருகிறது. இதனால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி யடைந்துள்ளனர். கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்க வேண்டும் என்று பொது மக்கள் வலியுறுத்தி யுள்ளனர்.